Mani Ratnam : சிம்பு ‘தக் லைஃப்’ படத்திற்குப் பொருத்தமான நடிகர்.. இயக்குநர் மணிரத்னம் பேச்சு!

Mani Ratnam Praises Silambarasan : கோலிவுட் பிரம்மாண்ட இயக்குநர்தான் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் அதிரடி கதைக்களத்துடன் வெளியாகவிருக்கும் படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன்தான் பொருத்தமான நடிகர் என்று மணிரத்னம் பேசியுள்ளார்.

Mani Ratnam : சிம்பு தக் லைஃப் படத்திற்குப் பொருத்தமான நடிகர்.. இயக்குநர் மணிரத்னம் பேச்சு!

மணிரத்னம் மற்றும் சிலம்பரசன்

Published: 

04 Jun 2025 22:38 PM

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப் பிரம்மாண்ட படங்களை இயக்கி, பல ரசிகர்களைத் தனது பக்கம் ஈர்த்துவைத்திருப்பவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான வரலாற்றுக் காவியம்தான் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan). இந்த படமானது இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் (Kamal Haasan)  இணைந்து எழுதி, இயக்கிய படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்துள்ளனர். மேலும் முன்னணி நடிகையான திரிஷா கிருஷ்ணனும்  (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்துடன் அதிரடி படமாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் கமல் மற்றும் சிம்பு எதிர் எதிர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கமல் மற்றும் சிம்புவிற்கு இருக்கும் சண்டைதான் இந்த படத்தின் பிரதான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மணிரத்னம், “சிலம்பரசன்தான் தக் லைஃப் படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்திற்குச் சரியான நடிகர், மிகவும் அருமையாக நடித்துள்ளார்” என்று பேசியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

சிலம்பரசன் பற்றி இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய விஷயம் ;

சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் நடிகர் சிலம்பரசனை பற்றியும் பாராட்டி பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மணிரத்னத்திடம், சிம்புதான் அந்த படத்தில் முதல் தேர்வான நடிகரா? என்று கேட்டிருந்தார் .

அதற்கு இயக்குநர் மணிரத்னம், “சிம்புதான் தக் லைஃப் படத்தில் மிக சரியான கதாபாத்திரம். சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தக் லைஃப் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார், மிகவும் அருமையாக சிலம்பரசனின் காட்சிகள் வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , நிச்சயம் நடிகராக இருந்தால் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் அது கமல் மற்றும் சிம்புவுடன் மிகவும் அதிகமாக உள்ளது” என்று இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட பதிவு :

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்கள் பலரும் நடித்துள்ள படமாக இந்த தக் லைஃப் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் பேமஸ் பிரபலங்களும் பணியாற்றியுள்ளனர்.இவ்வாறு மிக பிரம்மாண்ட கலைஞர்களின் படைப்பாக உருவாகியுள்ள தக் லைஃப் படம் 2025, ஜூன் 5ம் தேதியில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், நிச்சயமாக பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.