மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மணிரத்னம் – ரஜினிகாந்த் மீண்டும் இணைகிறார்களா?

Mani Ratnam: இரண்டு ஆண்டுகள் முன்பு பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றபோது நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் படம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மணிரத்னம் - ரஜினிகாந்த் மீண்டும் இணைகிறார்களா?

மணிரத்னம் - ரஜினிகாந்த்

Published: 

03 Jun 2025 21:48 PM

 IST

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) 3 தசாப்தங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை மீண்டு இயக்க உள்ளார் என்ற தகவல் கடந்த இரண்டு ஆண்டுகளாவே சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. இதற்கு காரணம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கதில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது தான். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக இந்த செய்தி பரவி வரும் நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நீங்க ரஜினி சாரை மீண்டு இயக்க உள்ளீர்களா என்று கேள்வி கேட்கப் படுகின்றது. அதற்கு பதிலளித்த மணிரத்னம் நீங்க இத ரஜினி சார்கிட்டதான் கேட்கனும். நீங்க இதற்காக பொருத்து இருக்க வேண்டும் நமக்கு எதுவுமே தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்திற்கு பிறகு ஒரு ப்ரேக்:

தொடர்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் படத்திற்குப் பிறகு, நான் ஒரு ப்ரேக் எடுக்க முடிவு செய்துள்ளேன். என் மனதில் தற்போது நான்கு கதைகள் இருக்கிறது. ஆனால் அந்த நான்கு கதைகளில் எதுவும் தற்போதுவரை முழுவதுமாக முடிக்கப்படவில்லை. அவற்றில் இருந்து எந்த கதையும் இறுதிவரை செல்லவில்லை என்றால், அதுவே முடிவாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு திரைப்பட இயக்குநருக்கும் அந்த கதையை ஒரு படமாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் கதையை எழுதுகின்ர்னார். அப்போது தோன்றும் பல விசயங்களை இணைத்து தான் ஒரு கதையை உருவாக்க்குகிறார்கள் என்றும் மணிரத்னம் அந்தப் பேட்டியின் போது தெரிவித்து இருந்தார்.

தக் லைஃப் படத்திற்கு பிறகு இந்த கதை எடுக்க உள்ளார் மணிரத்னம். அதில் இவர்கள் தான் நடிகர்கள் என்று பல வதந்திகள் பரவி வந்த நிலையில் மணிரத்னத்தின் இந்த பதில் அனைத்து வதந்திகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மணிரத்னம் – ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான தளபதி:

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தப் படம் தளபதி. 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் கேங்ஸ்டர் ட்ராமாவாக வெளியாகி இருந்தாலும் படத்தில் வரும் அம்மா சென்டிமெண்ட் மற்றும் காதல் காட்சிகள் அதிகமாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக நடிகர்கள் மம்முட்டி மற்றும் ரஜினியின் நட்பு இந்தப் படத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் இவர்களை மேற்கோள் காட்டி பேசும் அளவிற்கு ரசிகர்களிடையே இவர்களின் நட்பு மிகவும் ஆழமாக பதிந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை