மம்முட்டியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கலக்காவல் படம்… ஓடிடி ரிலீஸ் எப்போது?
Kalamkaval Movie OTT Update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கலம்காவல் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கலம்காவல்
மலையாள சினிமாவில் கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியப் படம் கலம்காவல். இந்தப் படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஷ் எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் சீரியல் கில்லர் கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். ஆனால் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகன் இல்லை. அவர் ஒரு சீரியல் கில்லராக இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர் விநாயகன் அந்த வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். பலப் படங்களில் வில்லனாக நடித்து வந்த விநாயகன் இந்தப் படத்தில் நல்ல கதப்பாத்திரத்தில் நடித்து இருந்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் முஜீப் மஜீத் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்… உறுதி செய்த வில்லன் நடிகர்
கலம்காவல் படம் எந்த ஓடிடியில் வெளியாகிறது?
இந்த நிலையில் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி நடுத்தட வயதை உடைய ஒரு மம்முட்டி தொடர்ந்து திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள், தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை காதலித்து திருமணம் செய்வதாக கூட்டுச்சென்று ஏமாற்றி கொலை செய்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் விநாயகன் அந்தப் பெண்கள் எல்லாம் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதை கண்டறிந்து இறிதியில் அந்த குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு முதல் வாரம் சோனிலிவ் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… இது வாழ்க்கையை முடிவு பண்ற இடம் கிடையாது… பிக்பாஸில் கம்ருதினுக்கு அட்வைஸ் கொடுத்த அவரது அக்கா