ரஜினி – கமல் இடையே இருக்கும் போட்டி எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே இல்லை – மம்முட்டி ஓபன் டாக்

Mammootty said there’s no ego between me and Mohanlal: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் மம்முட்டி மோகன்லால் உடனான புரிதல் மற்றும் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக உள்ளனர் என்பது குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றது.

ரஜினி - கமல் இடையே இருக்கும் போட்டி எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே இல்லை - மம்முட்டி ஓபன் டாக்

மோகன்லான் மற்றும் மம்முட்டி

Published: 

09 Apr 2026 17:24 PM

 IST

மலையாள சினிமாவில் உச்சத்தி இருப்பவர் நடிகர் மம்முட்டி. 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது மலையாள சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் மம்முட்டி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பேட்ரியட். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேட்ரியாட் படத்தில் நடித்தது குறித்தும் மோகன்லால் உடனான உறவு குறித்தும் பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

எனக்கும் மோகன்லாலுக்கும் இடையே அப்படி ஒன்று இல்லவே இல்லை:

அதன்படி சமீபத்தில் மம்முட்டி அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். அந்த கேள்வியில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நடிக்கும் படத்தின் புரோமோவில் கமல் ஹாசன் இயக்குநரிடம் இந்தப் படத்தில் யார் ஹீரோ. நானா இல்ல ரஜினிகாந்த் சாரா என்று கேள்வி கேட்பார். அப்படி நீங்களோ அல்லது மோகன்லாலோ பாட்ரியாட் படத்திற்காக இயக்குநரிடம் கேட்டீர்களா யார் ஹீரோ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய மம்முட்டி எனக்கோ அல்லது மோகன்லாலுக்கோ நல்லா தெரியும் கதைதான் இங்க ஹீரோ என்று. எங்க இரண்டு பேருக்கும் இடையே எப்போதுமோ ஈகோ இல்லை. நாங்கள் இருவரும் எப்போது வேண்டுமானாலும் இணைந்து நடிக்க தயாராக இருப்போம். மேலும் மோகன்லால் சமீபத்தில் திலீப்பின் படத்தில் கேமியோ செய்து இருந்தார். நானும் சத்தா பச்சா என்ற படத்தில் இளைஞர்களுடன் கேமியோ செய்து இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\

Also Read…  முதலமைச்சருக்கும் படிப்பு முக்கியம்… அபிசேக் பச்சனின் இந்த தஸ்வி படத்தை பார்த்து இருக்கீங்களா?

இணையத்தில் வைரலாகும் மம்முட்டியின் பேச்சு:

Also Read… பிரதீப் ரங்கநாதன் எனக்காக அந்த விசயத்தை செய்தார் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேச்சு

Follow Us
Related Stories
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?