கேரள அரசின் மாநில விருது வென்றவர்களுக்கு மம்முட்டி சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு

Kerala State Awards : மலையாள சினிமாவில் கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டிற்கான மாநில விருதை கேரள அரசு அறிவித்துள்ளது. அதில் பலருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருது வென்ற அனைவருக்கும் நடிகர் மம்முட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் மாநில விருது வென்றவர்களுக்கு மம்முட்டி சொன்ன விசயம் - வைரலாகும் பதிவு

மம்முட்டி

Published: 

04 Nov 2025 20:21 PM

 IST

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி (Mammootty). தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல நூறு படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து பலப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் 70 வயதைக் கடந்த ஒரு நடிகர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது மட்டும் இன்றி வெற்றியையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பாசூகா என இரண்டு படங்களில் நடித்து இருந்தார். மேலும் அடுத்தடுத்தப் படங்களும் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

இந்த நிலையில் கேரள அரசு மாநில விருதுகளை நேற்று அறிவித்தது. அதில் நடிகர் மம்முட்டி 7-வது முறையாக பிரம்மயுகம் மாநில அரசின் விருதுக்கு தேர்வாகி உள்ளது குறித்து அறிவிப்பு வெளியானது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து மம்முட்டிக்கு மட்டும் இன்றி மலையாள சினிமாவில் பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்:

இது தொடர்பாக நடிகர் மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, ஷாம்லா ஹம்சா, ஆசிஃப், டோவினோ, சௌபின், சித்தார்த், ஜோதிர்மயி, தர்ஷனா, சிதம்பரம் மற்றும் மஞ்சும்மெல் பாய்ஸ், பூகெய்ன்வில்லா, பிரேமலு மற்றும் கேரள மாநில விருதுகளை வென்ற அனைத்து அணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு மறக்கமுடியாத ஒரு பயணத்தை எனக்கு பரிசளித்த பிரம்மயுகம் குழுவினருக்கும் மிக்க நன்றி. கொடுமோன் போட்டியை மிகுந்த அன்புடன் வரவேற்ற பார்வையாளர்களுக்கு இந்தப் பாராட்டை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… வாழ்க்கையில் போலி முகமூடி எனக்கு தேவையில்லை – நடிகை பார்வதி திருவோத்து

மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!