8 ஆண்டுகளைக் கடந்தது மகேஷ் பாபுவின் சூப்பர் ஹிட் பரத் அனே நேனு படம்

8 Years Of Bharat Ane Nenu: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக உள்ளபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பரத் அனே நேனு படம் தற்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

8 ஆண்டுகளைக் கடந்தது மகேஷ் பாபுவின் சூப்பர் ஹிட் பரத் அனே நேனு படம்

பரத் அனே நேனு

Published: 

20 Apr 2026 19:34 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பரத் அனே நேனு. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கொரட்டால சிவா எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,
தேவராஜ், ஆர்.சரத்குமார், ஆமணி, பி. ரவிசங்கர், போசானி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ், சித்தாரா, பிரம்மாஜி, அஜய், பானர்ஜி, ஜீவா, ப்ருத்விராஜ், தேவதாஸ் கனகலா, யஷ்பால் சர்மா, முக்தர் கான், சத்ரு, சூர்யா, சாக்ஷி சிவா, ஜெயலலிதா, ராஜிதா, கௌமுதி நேமணி, ராகுல் ராமகிருஷ்ணா, அனிஷ் குருவில்லா, மகாதேவன், ராஜசேகர் அனிங்கி, மாஸ்டர் மிகைல் காந்தி, அப்பாஜி அம்பரீஷா தர்பா, சுதாகர் மிஸ்ரா ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

இந்தப் படம் கடந்த திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக தயாரிப்பாளர் டி. வி. வி. தனய்யா தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

8 ஆண்டுகளைக் கடந்தது பரத் அனே நேனு படம்:

ஆந்திரபிரதேச முதல்வராக இருக்கும் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியின் மகன் தான் மகேஷ் பாபு. சிறு வயதிலேயே அம்மாவை இழந்த மகேஷ் பாபு தனது தந்தை மீது இருந்த வெறுப்பு காரணமாக பெஸ்ட் ஃப்ரண்டுடன் லண்டன் சென்று அங்கேயே படித்து வருகிறார். படிப்பில் மிகவும் ஆர்வம் உடன் இருக்கும் அவர் பல பட்டங்களைப் பெறுகிறார். தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மகேஷ் பாஉவிற்கு தனது தந்தை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஆந்திராவிற்கு வரும் மகேஷ் பாபு என்ன செய்தார். தனது தந்தையின் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

Also Read… சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்!

பரத் அனே நேனு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தளபதி விஜய்யின் தவெக-வில் இணைந்த சீரியல் நடிகர்கள்.. அட யார் யார் தெரியுமா?

Follow Us
Related Stories
அப்பா – மகன் இடையே இருக்கும் ஈகோ… இறுதியில் வென்றது யார்? மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!
லோகேஷ் கனகராஜின் ’29 தி பிலிம்’ ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு – வைரலாகும் அப்டேட்
பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..