ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் டைட்டில் விவகாரம் – நீதிமன்றம் கொடுத்த மாஸ் உத்தரவு

Bro Code Movie: நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக ப்ரோ கோட் என்ற படம் தயாராகி வருகின்றது. இதில் ரவி மோகன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று பிரபல மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் டைட்டில் விவகாரம் - நீதிமன்றம் கொடுத்த மாஸ் உத்தரவு

ரவி மோகனின் ப்ரோ கோட்

Published: 

05 Oct 2025 15:16 PM

 IST

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பதால் அனைவரும் இவரை பல ஆண்டுகளாக ஜெயம் ரவி என்றே அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு கடிதம் எழுதிய இவர் தன்னை இவ்வளவு நாள் ஜெயம் ரவி என்று அழைத்து உங்களது அன்பையும், பாசத்தையும் அள்ளிக் கொடுத்தீர்கள். இனி என்னை எனது தந்தையின் பெயருடன் சேர்த்து ரவி மோகன் என்று அழையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களும் அவரை ரவி மோகன் என்று அழைக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழா மிகவும் பிரமாண்டமாக திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டதுடன் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போது படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார். அந்த ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை டிக்கிலோனா என்ற படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பது மட்டும் இன்றி ரவி மோகன் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்கிறார். இவருடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ப்ரோ கோட் படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்:

இந்த நிலையில் படத்திற்கு ப்ரோ என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று டெல்லியில் இருக்கும் பிரபல மதுபான நிறுவனம் ஒன்று வழக்கை தொடர்ந்தது. அந்த வழக்கில் மதுபான நிறுவனம் கூறியுள்ளதாகவது, அவர்களின் மதுபானத்தின் கம்பெனி பெயர் ப்ரோ கோட் என்பதால் இந்தப் படத்திற்கு தலைப்பை பயன்படுத்தினால் அவர்களின் வர்த்தக உரிமைக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கை எதிர்த்தி ரவி மோகன் ஸ்டூடியோஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ப்ரோ கோட் என்பது சினிமா படத்தில் தலைப்பு மட்டுமே என்றும் அது எந்த விதத்திலும் மதுபான நிறுவத்தை பாதிக்காது என்றும் தெரிவித்தது. இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரனைக்கு வந்தது. அபோது ரவி மோகன் ஸ்டூடியோர் ப்ரோ கோட் என்ற தலைப்பை பயன்படுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read… அந்தப் படத்தை பார்த்துவிட்டு தியேட்டர்ல விட்ட காரை மறந்து வீட்டுக்கு நடந்தே வந்துட்டேன் – இயக்குநர் விக்ரமனை வெகுவாக பாதித்தப் படம் எது தெரியுமா?

ப்ரோ கோட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்