AR Murugadoss: மதராஸி படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன உண்மை!
AR Murugadoss About Madharaasi climax: மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு வில்லனாக வித்யுத் ஜாம்வால் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய முருகதாஸ், மதராஸி படத்திற்கு முதலில் வைத்திருந்த க்ளைமேக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் 23வது திரைப்படமாக வெளியானது மதராஸி (Madharaasi). இந்த படத்தை முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு தர்பார் என்ற படம் தமிழில் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின், இவரின் இயக்கத்தில் தமிழில் வெளியானதுதான் மதராஸி. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஏஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். இந்த மதராஸி படமானது முற்றிலும், ஆக்ஷ்ன், காதல் மற்றும் எமோஷன் சார்ந்த கதைக்களம் கொண்ட படமாக இருந்தது.
இப்படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பற்றி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார். அதில் அவர் முதலில் இந்த மதராஸி அப்படி கதையை எழுதும்போது, கிளைமேக்ஸ் காட்சியில் கதாநாயகி இறந்துவிடுவது போலத்தான் எழுதினேன் என கூறியுள்ளார். மேலும் அதை மாற்றுவதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ஜன நாயகன் படத்தில் 100 சதவீதம் விஜய்யிசம் இருக்கும்.. எடிட்டர் கொடுத்த அப்டேட்!
மதராஸி பட க்ளைமேக்ஸ் காட்சி குறித்து ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த உண்மை:
அந்த நேர்காணலில் ஏ.ஆர். முருகதாஸ், “நான் மதராஸி படத்தின் கதையை எழுதும்போது, கிட்டத்தட்ட 2 வருடங்களாக அந்த கதையை எழுதியிருந்தேன். அந்த நேரத்தில், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கதாநாயகி இறந்துவிடுவார் என்றுதான் எழுதியிருந்தேன். பின் என்னிடம் ஒருவர், ஹீரோ கதாநாயகிக்காகத்தான், அதில் அனைவரையும் காப்பாற்ற நினைப்பார். அவரின் காதலி இறந்துவிட்டால் அவரின் காதல் பொய்யாகிவிடும் . மேலும் அவரின் கதாபாத்திரத்திற்கு ஒரு பிடிப்பு இருந்திருக்காது என கூறினார்.
இதையும் படிங்க : சிம்புவை அப்படி சொல்லாதீங்க.. இதுதான் உண்மை – ஓபனாக பேசிய அஸ்வத் மாரிமுத்து!
அதன் பிறகுதான் நானும் யோசித்தேன், மதராஸி படத்தின் மற்ற காட்சிகளின் ஷூட்டிங் முடிந்த பிறகு, க்ளைமேக்ஸ் காட்சியின்போதுதான், நான் மீண்டும் வேறு கடைசியாக மாற்றினேன். ஒருவேளை நான் அந்த க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றாமல் இருந்தால், காதலியை காப்பாற்றுவதற்கு நல்லது செய்தாலும், பலன் இல்லை என்பதுபோல ஆகிவிடும். அதனால் உடனே மதராஸி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை மாற்ற நினைத்தேன்” என ஏ.ஆர். முருகதாஸ் அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
மதராஸி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
#Madharaasi is a total package of entertainment 💥💥
Don’t miss it in theatres near you ❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLe7q1#MadharaasiMadness #Madharaasi#BlockbusterMadharaasi pic.twitter.com/4wrRCsQVQb— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 12, 2025
மதராஸி படத்தின் மொத்த வசூல் :
சிவகார்த்திகேயனின் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் வெளியான மதராஸி படமானது, மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் சில, விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி 6 நாட்களான நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் ரூ 47.97 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக sacnilk என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.