ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – வைரலாகும் தகவல்
Love Insurance Kompany Movie Release Date Finally Locked: தமிழ் சினிமாவில் முன்னதாக உருவாகி தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டு இருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது படமாக உருவானது லவ் டுடே. இந்தப் படத்தை அவரே இயக்கியது மட்டும் இன்றி இந்தப் படத்தின் மூலமாக நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்படி இவர் இயக்குநராக அறிமுகம் ஆன படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக அறிமுகம் ஆன படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்தும் அடுத்தடுத்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு இடையில் பிரதீப் ரங்கநாதன் ட்ராகன் மற்றும் டியூட் என இரண்டௌ படங்களில் நடித்து அந்தப் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு:
அதன்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 3-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 40 மில்லியன் பார்வைகளைக் கடந்தது முட்ட கலக்கி பாடல் – கொண்டாட்டத்தில் படக்குழு
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s going to be a Good Friday ⭐️
3.4.2026#LIKFromApril3 #LIK #LoveInsuranceKompany
An @anirudhofficial musical 🎵
A #Wikki original@pradeeponelife #VigneshShivan @anirudhofficial @IamKrithiShetty@iam_SJSuryah #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav… pic.twitter.com/iNrAoyZxX3
— Seven Screen Studio (@7screenstudio) March 18, 2026
Also Read… அன்பறிவு இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்