லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

Love Insurance Kompany: தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

Published: 

03 Jul 2025 17:55 PM

இயக்குநர் விக்னேஷ் சிவன் (Director Vighnesh Shivan) இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்தப் படத்தில் நாயகனாக நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், சீமான், கௌரி ஜி. கிஷன், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி மற்றும் ஷா ரா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக முடிந்ததாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பல தடைகளை தாண்டி தற்போது படப்பிடிப்பை முடித்துள்ளது. முன்னதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்பு பட்ஜெட் பிரச்னைகள் காரணமாக அந்த கூட்டணி தொடராமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.

படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று தற்போது படம் வெளியீட்டிற்காக தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்தப் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ட்ராகன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் நூறாவது நாள் விழாவை சமீபத்தில் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.