Lokesh kanagaraj: ஜெயிலர் 2 கதை எனக்கு தெரியும் – லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj And Nelson Dilipkumar : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யின் லியோ படத்தை இயக்கியிருந்தார். அதை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கூலி. இந்த படத்தின் ப்ரோமோஷன் போது, நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தின் ஸ்கிரிப்டை நெல்சன் தன்னிடம் கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார்
கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் லியோ (Leo). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. தளபதி விஜயை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் (Rajinikanth) லோகேஷ் இணைந்த படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். இது ரஜினியின் 171வது படமாக உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகக் காத்திருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர், “நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 திரைப்படத்தின் கதையைத் தன்னிடம் கூறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கூலி படத்தை அடுத்து, சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகத்தான் ஜெயிலர் 2 படமானது உருவாகி வருகிறது.
இதையும் படிங்க : கூலி பட டிக்கெட் வாங்க முந்தியடித்த கேரள ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பற்றிப் பேசிய லோகேஷ் கனகராஜ் :
கிரந்த நேர்காணலில் கூலி படம் பற்றி மற்றும் ரஜினிகாந்த் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நிறையத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் நெல்சன் திலீப்குமார் குறித்து லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தின் ஸ்கிரிப்டை நான், நெல்சனிடம் கூறினேன், அதைப்போல ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு முன்னே, நெல்சனும் படத்தின் ஸ்கிரிப்டை பற்றி விவரமாகக் கூறிவிட்டார். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் படங்களில் பணியாற்றி இருக்கிறோம்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஜெயிலர் 2 படத்தைப் பற்றியும், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தின் பிரீமியர் காட்சி எப்போது தெரியுமா?
கூலி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
Massive fan craze storms theatres for just the advance booking of #Coolie in Thrissur, Kerala!🔥🔥🔥#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja… pic.twitter.com/nYWOQNfHSg
— Sun Pictures (@sunpictures) August 8, 2025
ஜெயிலர் 2 திரைப்படம் :
கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிவருவது ஜெயிலர் 2 திரைப்படம். இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.இயக்கிவருகிறார். இந்த படத்தைக் கூலி படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனமான, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் நடிகர் சிவராஜ் சிவகுமார் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முதல் பாகத்தை விட பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.