Mr.Bhaarath : லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு.. ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Mr. Bharath Movie Shooting Complete : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் தயாரிப்பில், இயக்குநர் நிரஞ்சன் இயக்கியிருக்கும் படம்தான் மிஸ்டர் பாரத். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mr.Bhaarath : லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு.. மிஸ்டர் பாரத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

மிஸ்டர் பாரத் திரைப்படம்

Published: 

17 Jul 2025 11:26 AM

அறிமுக இயக்குநர் நிரஞ்சன் (Niranjan) இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மிஸ்டர் பாரத் (Mr. Bhaarath). இந்த படத்தில் முன்னணி நாயகனாக யூடியூப் புகழ் நடிகர் பாரத் (Bhaarath) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே என்ற படத்தில் அவரின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த பிரபலத்தை அடுத்ததாகக் கதாநாயகனாக மிஸ்டர் பாரத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகக் ‘கட்சி சேர’ என்ற பாடலில் நடனமாடிய நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் (Samyuktha Viswanathan) இணைந்து நடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், இந்த மிஸ்டர் பாரத் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தைப் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தயாரித்துள்ளார்.

இவரின் தயாரிப்பில் உருவாகிவந்த இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் நிறைவைப் படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : முதல் 3 நாட்களுக்கு யூடியூப் விமர்சனங்கள் வேண்டாம்: விஷால் வேண்டுகோள்!

மிஸ்டர் பாரத் படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் நிறைவு வீடியோ :

மிஸ்டர் பாரத் திரைப்படம் இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விசுவநாதன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள், பாலா சரவணன்,, நிதி பிரதீப், லிங்கா மற்றும் ஆதித்யா கத்தி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி மக்கள் மத்தியில் வைரலான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்திருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சாணி அள்ளிய கையால் தேசிய விருது.. நித்யா மேனன் பகிர்ந்த நினைவுகள்!

லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் ஆரம்பத்தில் இயக்குநராகவே அறிமுகமானார். இவர் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்ததாகக் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் தற்போது கூலி எனப் பல படங்களை இயக்கிவந்தார். இந்த படங்களின் வெற்றியை அடுத்ததாகத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருந்தார்.

பைட் கிளப் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான நிலையில், அடுத்ததாக பல படங்களையும் தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பில் மிஸ்டர் பாரத் படத்தை அடுத்ததாக பென்ஸ் படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.