Lokesh Kanagaraj : 2 ஆண்டுகள் கடின உழைப்பு.. கூலி படத்தில் பணியாற்றியவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி!
Lokesh Kanagaraj X Post : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் தளபதி விஜய் வரை பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், கூலி படமானது வெளியீட்டிற்குக் காத்திருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜின் எக்ஸ் பக்க பதிவு வைரலாகி வருகிறது. அவர் அந்த பதிவில், கூலி படத்தில் உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகி காத்திருக்கும் படம் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), சத்யராஜ், நாகார்ஜுனா, ஆமிர் கான், உபேந்திரா மற்றும் சௌபின் சாஹிர் என பல்வேறு திரை பிரபலங்கள் உடன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். மேலும் சன் பிச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல், உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவானது, இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கூலி படத்தில் உனது பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் புகைப்படத்தை பகிர்ந்து, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆமிர் கான் நடிக்கும் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் பேச்சு!
நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
With #Coolie unleashing in just a few days, I want to take a moment to thank the entire team who poured their hearts into it – 140 days of shoot spread over 2 years!
This project has been incredibly close to my heart. 💛
Proud of you boys 💪🏻🔥 pic.twitter.com/hpxfHTj65J
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 7, 2025
அந்த பதிவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படமானது சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் தங்கள் முழு மனதுடன் ஈடுபட்ட குழுவினருக்கு, ஒரு கணம் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். சுமார் 2 ஆண்டுகளில், 140 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றிருக்கிறது. இந்த படமானது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் நண்பர்களே” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த எக்ஸ் பதிவில் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க : அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ – அதிரடி டீசர் இதோ!
கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது?
இந்த கூலி திரைப்படத்தின் ப்ரீ புங்கிக்கானது வெளிநாடுகளில் சில நாட்களுக்கு முன்னே ஆரம்பமாகியிருந்தது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், இந்தியாவில் வரும் 2025, ஆகஸ்ட் 8 அல்லது 10ம் தேதி முதல் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இந்த படமானது பான் இந்தியா அளவிற்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நிச்சயமாக இப்படம் சுமார் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் எனக் கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.