லெவன் படத்தின் கதை நடிகர் சிம்புவிற்காக எழுதியது – இயக்குநர் ஓபன் டாக்
Eleven Movie: கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றப் படம் லெவன். க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது விட ஓடிடியில் வெளியான பிறகு மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லெவன்
நடிகர் நவீன் சந்திரன் (Naveen Chandra) நடிப்பில் கடந்த மே மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லெவன். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளியான இந்த லெவன் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படத்தின் கதையும், நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிம்புவிற்காக எழுதப்பட்டது லெவன் படத்தின் கதை:
இந்த நிலையில் லெவன் படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அதில் இந்தப் படம் நடிகர் சிலம்பரசனை மனதில் வைத்து அவருக்காக எழுதியது என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் கதையை சிம்புவிடம் கூற பல முறை முயற்சி செய்ததாகவும் ஆனால் அவரை பார்க்க கூட முடியவில்லை என்றும் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் விரைவில் நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்குவேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் லெவன் படத்தில் நடிகர் சிம்பு நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகரக்ள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர்.
லெவன் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Deleted shot ❤️❤️#BENJAMIN & #benjamin#PlanC #Eleven@Naveenc212 @ARentertainoffl @immancomposer @actressReyaa @abhiramiact @Riythvika @ActorDileepan @karthikisc @srikanth_nb @onlynikil pic.twitter.com/So4OngPQpu
— Lokkesh Ajls (@lokeshajls) July 2, 2025
லெவன் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்:
பொதுவாக க்ரைம் த்ரில்லர் பாணியில் சைக்கோ கொலைகாரர்கள் குறித்து வெளியாகும் படங்களில் வரும் சைக்கோ கொலைகாரனை திட்டித் தீர்ப்பது மட்டும் இன்றி அந்தப் படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்த நடிகரை ரசிகர்கள் வெறுத்து ஒதுக்குவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த கூற்று இந்த லெவன் படத்தில் நடக்கவில்லை.
ஒரு சைக்கோ கொலைகாரனை ரசிகர்கள் கொண்டாடியதும் அவருக்கு ஆதரவாக பேசியதும் இந்த லெவன் படத்தின் மூலமாகவே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சைக்கோ கொலைகாரர்கள் தொடர்பாக வெளியாகும் படங்களில் அந்த சைக்கோ கொலைகாரர்களின் முந்தைய வாழ்க்கை மிகவும் கொடுமையானதாக இருப்பது போன்று காட்டப்படும்.
ஆனாலும் அந்தப் படத்தில் நடித்த நடிகரை திட்டுவதை வழக்கமாக வைத்து இருந்தனர். ஆனால் லெவன் படத்தைப் பொருத்தவரை சைக்கோ கொலைகாரனாக நடித்தவரை பாவம் என்றும் அவர் பக்கம் உள்ள நியாங்கள் குறித்தும் ரசிகர்கள் பேசியது கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.