Lockdown: பதைபதைக்க வைத்ததா அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன்’ படம்? விமர்சனம் இதோ!

Lockdown Movie Review: தென்னிந்திய மொழி படங்களில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் லீட் கதாநாயகியாக நடித்துள்ள படம் லாக்டவுன். இந்த படமானது இன்று 2026 ஜனவரி 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Lockdown: பதைபதைக்க வைத்ததா அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் படம்? விமர்சனம் இதோ!

லாக்டவுன் பட விமர்சனங்கள்

Published: 

30 Jan 2026 16:04 PM

 IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வரவேற்பை பெற்றபடம் பைசன் (Bison). இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தை அடுத்தாக இவர் தமிழில் நடித்துள்ள படம் தான் லாக்டவுன் (Lockdown). இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா (AR. Jeeva) இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் லீட் ரோலில் நடிக்க அவருடன் நடிகர்கள் ரேவதி (Revathi), அபிராமி, சார்லி, இளவரசு, லிவிங்ஸ்டன், பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் உருவான நிலையில், கிட்டத்தட்ட பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஒருவழியாக இன்று 2026 ஜனவரி 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: 2016 முதல் 2022.. சிறந்த நடிகர் – நடிகைகள் யார்? தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் :

இப்படமானது சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களால் சுரண்டப்படும் ஒரு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு லாக்டவுன் என்ற டைட்டிலும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. இதில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது நடிப்பை சிறப்பாகவே வழங்கியுள்ளாராம். மேலும் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவாவின் கதையும் மக்களை ஈர்க்ககூடிய கதைக்களத்தில் அமைந்துள்ளது.

லாக்டவுன் திரைப்படத்தின் மைய கரு என்ன?

இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், தோழியின் அழைப்பை ஏற்று மது பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்கிறார். அந்த மகிழ்ச்சி பெரும் துயருக்குக் கொண்டு செல்லும் பாதையாக மாறிவிடுகிறது. மது மயக்கத்தில் அவருக்குத் தெரியாமலேயே கர்ப்பமாகிவிடுகிறார்.

இதையும் படிங்க: எனது அடுத்த திரைப்படம் இப்படித்தான் இருக்கும் – அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்த விஷயம்!

பெற்றோருக்குத் தெரியாமல் அதைக் கலைத்துவிட முடிவெடுக்கும் நாளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் நடக்கும் விஷயங்களே படத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர செய்கிறது.

இந்த லாக்டவுன் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவர தொடங்கியுள்ளார். இந்த லாக்டவுன் படமானது மாறுபட்டக் கதையிலே உருவாகியுள்ளது. இப்படம் நடிகையின் சிக்கலைப் பற்றி மட்டுமின்றி ஊரடங்குக் காலத்தில், வருமானம் இழந்த குடும்பம், ஊருக்குத் திரும்ப முடியாத தொழிலாளி, உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவர்கள், தனிமையில் தவிக்கும் இளைஞர்கள் போன்ற காரணிகளையும் கட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக திரையரங்கு சென்று பார்க்கும் ஒரு படமாகவே இது உள்ளதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ