C. Joseph Vijay: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

Tamil cinema celebrities congratulated Chief Minister Joseph Vijay: சினிமாவில் நாயகனாக இருந்து, தற்போது மக்கள் சேவைக்காக அரசியல் சென்று, தவெக கட்சியின் மூலம் தமிழக முதலமைச்சராக தளபதி விஜய் இன்று 2026 மே 10ம் தேதி பதவியேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு தமிழ் பிரபலங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அது யார் யார் என விவரமாக பார்க்கலாம்.

C. Joseph Vijay: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை... தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

Updated On: 

10 May 2026 11:47 AM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, தற்போது தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றிருப்பவர் ச.ஜோசப் விஜய் (C.Joseph Vijay). இவர் நடந்துமுடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) கீழ் போட்டியிட்டிருந்தார். அந்த வகையில் மக்களிடையே அதிக வாக்குகள் பெற்று, தமிழகத்தில் அதிக டெபாசிட்டுகளை பெற்று முன்னிலை கட்சியாக இருந்தது. இதில் முதல்வராக பதவியேற்பதற்கு பல பிரச்சனைகளை கடந்து, இன்று 2026 மே 10ம் தேதியில் சென்னை நேரு உள் அரங்கத்தில் முதலமைச்சராக பதவியேற்பு விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவின்போது, பல்வேறு உச்ச நடிகர்கள், அரசியல் பிரமுகர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் முதலாச்சராக ச.ஜோசப் விஜய் (Tamil Nadu CM) பதவியேற்றுள்ளார்.

அந்த வகையில் அவருக்கு பல்வேறு பிரபலங்கள் தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆர்.மாதவன் முதல் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வரை பலவாறு பிரபலங்கள் தங்களின் சமூக ஊடகப்பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். யார் யார் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: அது எனக்கு மகிழ்ச்சியான தொல்லையாக இருந்தது.. ரசிகர்கள் குறித்து தளபதி விஜய் சொன்ன விஷயம்!

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட பதிவு:

இந்த பதிவில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, உங்கள் நோக்கங்களையும் அறிந்திருப்பதால், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு நமது பெருமைமிக்க மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்ட ஆர்.மாதவன்:

இதில் ஆர்.மாதவன், “என் அன்பு சகோதரரே, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முதலமைச்சராக உங்கள் பதவிக்காலம் நமது மாநிலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையட்டும்” என வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவு :

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிபி சத்யராஜ் வெளியிட்ட பதிவு:

முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து சொன்ன ஜி.வி. பிரகாஷ் குமார்:

மேலும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் பலரும் தமிழாக முதலமைச்சர் ச ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி