கர முதல் D57 வரை.. தனுஷின் புது படங்களின் இசையமைப்பாளர்கள் யார் யார் தெரியுமா?

Dhanush New Movie Music Directors List: பான் இந்திய பிரபல நாயகனாக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. தமிழில் இவர் நடித்துவரும் மற்றும் நடிக்கவுள்ள படங்களின் இசையமைப்பாளர்கள் யார் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கர முதல் D57 வரை.. தனுஷின் புது படங்களின் இசையமைப்பாளர்கள் யார் யார் தெரியுமா?

தனுஷ் புதிய பட இசையமைப்பாளர்கள்

Updated On: 

03 Feb 2026 17:22 PM

 IST

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்க, இந்தி மொழியை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ருதி சனோன் (Kriti Sanon) நடித்திருந்தார். இந்த படமானது தற்போதுள்ள ஜெனரேஷன் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பைக் கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தனுஷின் நடிப்பில் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக உள்ளது. கிட்டத்தட்ட 4 தமிழ் படங்களில் தொடர்ந்து தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் போர் தொழில் பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகியுள்ள டி54 அதாவது “கர” (Kara) படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் நடிப்பில் இதையடுத்து டி55, டி56 மற்றும் டி57 போன்ற படங்கள் உருவாக்கவுள்ளது இப்படத்தின் இசையமைப்பாளர்கள் யார் என பார்க்கலாம்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு – அபிஷன் ஜீவிந்த்

தனுஷின் புது திரைப்படங்களின் இசையமைப்பாளர்கள் லிஸ்ட் :

  • தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் கூட்டணியில் உருவாகியுள்ள படமான கர படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
  • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள டி55 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.
  • மாரி செல்வராஜ் மற்றும் தனுஷின் கூட்டணியில் வரலாற்று பின்னணியில் உருவாக்கவுள்ள டி56 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
  • லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாக்கவுள்ள புது படமான டி57 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தனுஷின் புது பட இசையமைப்பாளர்கள் குறித்து வைரலாகும் பதிவு:

கிட்டத்தட்ட தனுஷின் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த 4 தமிழ் படங்களானது தயாராகவுள்ளது. இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் தனுஷ் புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் ஷூட்டிங்கும் இப்படங்களை முடிந்த கையேடு தனுஷ் இணைவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டு தனுஷின் நடிப்பில் முதல் படமாக கர படம் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்

இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருக்கும் நிலையில், வித்தியாசமான ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தது. இப்படம் தனுஷின் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..