பொங்கல் ரிலீஸிலிருந்து அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?

2026 Pongal Festival Postponement Movies: தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் மற்றும் பராசக்தி என 2 படங்கள் மட்டுமே வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் ஜன நாயகன் படம் ரிலீஸாகாத நிலையில், புது படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது அதிலிருந்து மீண்டும் தள்ளிப்போன படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பொங்கல் ரிலீஸிலிருந்து அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மூன்று திரைப்படங்கள்? என்னென்ன தெரியுமா?

தமிழ் திரைப்பட ஒத்திவைப்புகள்

Published: 

13 Jan 2026 20:19 PM

 IST

தெறி திரைப்பட ரீ-ரிலீஸ் (Theri Re-Release): நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம்தான் தெறி. இப்படத்தை இயக்குநர் அட்லீ (Atlee) இயக்கியிருந்தார்.  இது விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தளபதி விஜய், சமந்தா (samantha), எமி ஜாக்சன், நைனிகா உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S Thanu) தயாரிக்க, ஜி.வி பிரகாஷ்(GV Prakash) இசையமைத்திருந்தார். இந்த படமானது அப்போதே சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடக்கவுள்ள நிலையில், இது 2026 ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ரிலீஸை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி… 5 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜயின் மாஸ்டர் படம்

தெறி பட ரீ-ரிலிஸ் ஒத்திவைப்பு குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

திரௌபதி 2 திரைப்படம் (Draupathi 2):

தமிழில் பிரபல இயக்குநர்களின் ஒருவர் மோகன் ஜி (Mohan G). இவரின் இயக்ககத்தில் வரலாற்று கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளது திரௌபதி 2. இந்த படத்தில் நடிகர்கள் ரிச்சர்ட் ரிஷி, நடராஜ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 14 ஆம் நூற்றாண்டில் பல்லவ கால கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமானது 2026 ஜனவரி 15 ஆம் தேதியில் திரையரங்குகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீசுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.மேலும் இப்படம் 2026 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகும் என மோகன் ஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திரௌபதி 2 பட ரிலீஸ் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

ஜாக்கி திரைப்படம் (Jockey Movie):

அறிமுக இயக்குநர் பிரகபால் இயக்கத்தில், கிடாய் சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ஜாக்கி. இப்படத்தில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அம்மு அபிராமி அடித்துள்ளார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் நடிகர் ரிதான் க்ரிஷ்னாஸ் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு தடங்கல் ஒன்னும் புதிதல்ல.. சூர்யா அண்ணாவிற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்- கார்த்தி பேச்சு!

இந்த படமானது மதுரை மாவட்டத்தின் கிராமங்களில் நடக்கும் கதையை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகிறது.

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!