2025-ம் ஆண்டில் பெற்றோர்களான பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

New Celebrities Parants in 2025: சினிமாவில் தொடர்ந்து நடிகர்களின் புதுப் படங்களின் அப்டேட்களைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவது போல அவர்களின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்த செய்திகளைக் தெரிந்துந்துக் கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு பெற்றோர்களான பிரபலங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

2025-ம் ஆண்டில் பெற்றோர்களான பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

பிரபலங்கள்

Published: 

21 Dec 2025 21:46 PM

 IST

பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி: தமிழ் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் பாடலாசியராக வலம் வருகிறார் பாடலாசிரியர் சினேகன். இவரது வரிகளில் வெளியான பாடல்கள் பல ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி சின்னத்திரையில் பல சீரியல்களுக்கு தொடர்ந்து பாடல்களை எழுதியுள்ளார். இவர் பெரும்பாலும் காதல் பாடல்கள், ஃபேமிலி செண்டிமெண்ட் பாடல்கள் மற்றும் உறவுகள் தொடர்பான பாடல்களை எழுதியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் பாடலாசிரியர் சினேகன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதி பிரபலமான சினேகனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த கன்னிகா சின்னத்திரை சீரியல்களிலும் படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு காதல் மற்றும் கவிதை என நடிகர் கமல் ஹாசன் பெயர் வைத்தார். அவர் தலைமையில் தான் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா தம்பதி: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கு முதல் திருமணம் பிரிவில் முடிந்தது. அந்த திருமணத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவதாக நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் மீரா என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!

நடிகர் பிரேம்ஜி அமரன் மற்றும் இந்தி தம்பதி: தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுளராக வலம் வந்தவர் நடிகர் பிரேம் ஜி. இவருக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் கொண்டாடியதைவிட ரசிகர்கள் அதிகமாக கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இந்த 2025-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்… யார் யார் வெளியேறப்போறாங்க தெரியுமா?

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை