Kriti Sanon: ராஷ்மிகாவிற்கு அந்த பழக்கமே கிடையாது – கிரிதி சனோன் பேச்சு!

Kriti Sanon About Rashmika Mandanna: பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கிரிதி சனோன். இவர் ராஷ்மிகாவுடன் இணைந்து காக்டெயில் 2 என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கிரிதி சனோன், ராஷ்மிகா குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Kriti Sanon: ராஷ்மிகாவிற்கு அந்த பழக்கமே கிடையாது - கிரிதி சனோன் பேச்சு!

கிரிதி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா

Updated On: 

11 May 2026 16:32 PM

 IST

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கிரிதி சனோன் (Kriti Sanon). இவர் இறுதியாக தனுஷிற்கு ஜோடியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்க, தனுஷ் (Dhanush) நயாகனாக நடித்திருந்தார். இப்படம் தனுஷின் நடிப்பில் 4வது வெளியான இந்தி படமாகும். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தில் முக்தி என்ற வேடத்தில் நடித்து நடிகை கிரிதி சனோன் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமாகியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக புது புது படங்களில் கதாநாயகியாக நடித்தவருகிறார். அந்த வகையில் ஷாகித் கபூர் (Shahid Kapoor), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் கிரிதி சனோன் இணைந்து காக்டெயில் 2 (Cocktail 2) என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இந்தி இயக்குநர் ஹோமி அடஜானியா இயக்கியுள்ள நிலையில், வித்தியாசமான ஜென்-ஜீ கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கிரிதி சனோன், ராஷ்மிகா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அப்படி ராஷ்மிகா பற்றி என்ன கூறினார் என்பதை விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி – வாழ்த்தும் பிரபலங்கள்

நடிகை கிரிதி சனோன் வெளியிட்ட காக்டெயில் 2 பட பதிவு:

ராஷ்மிகா மந்தனா பற்றி நடிகை கிரிதி சனோன் பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் பேசியிருந்த நடிகை கிரிதி சனோன், அதில் “ராஷ்மிகா மிகவும் நேர்மையானவர் மற்றும் அன்பானவர். அவருக்கு ஒரு துளி கூட பொறாமை என்பது கிடையாது. மேலும் ராஷ்மிகாவை சுற்றி ஒரு பாசிட்டிவ் வைப் எப்போதுமே இருக்கும், அவருடன் ஷூட்டிங் தளத்தில் நேரத்தை செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” எனறு அதில் அவர் கூறியுள்ளார். தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர்.. ஜன நாயகன் பட டைட்டில் கார்ட் குறித்து பேசிய தயாரிப்பாளர்!

நடிகை கிரிதி சனோன், ராஷ்மிகா மாறும் ஷாகித் கபூர் நடித்துள்ள காக்டெயில் 2 படமானது சிறப்பாக தயாராகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இப்படமானது வரும் ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி