அருண் விஜய்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.. ரெட்ட தல பட இயக்குநர் பேச்சு!
Krish Thirukumaran About Arun Vijay : : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் படம் ரெட்ட தல. இதை இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராகிறார்.

கிரிஷ் திருக்குமரன் மற்றும் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை நேரத்தில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் ஹீரோ என இரு வேடத்தில் இவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை சித்தி இத்னானி (Siddhi Idnani) நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பாபி ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். (Sam CS) இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Krish thirukumaran) இயக்கியிருக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இவர் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே மற்றும் உதயநிதி ஸ்டாலினை வைத்து கெத்து ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், கடந்த 9 வருடகாலமாக இவர் எந்த படங்களையும் இயக்கவில்லை. இந்நிலையில், அருண் விஜய்தான், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்ததாக இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கேரளாவில் மோகன்லாலுக்கு ஈடுகொடுக்கும் ரஜினிகாந்த்.. டிக்கெட் புக்கிங்கில் வசூலை அள்ளும் கூலி படம்!
அருண் விஜய் குறித்து இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூறியது :
சமீபத்தில் இந்த ரெட்ட தல படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.”தனக்குப் பல ஆண்டுகளாகப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, மான் கராத்தே மற்றும் கெத்து போன்ற படங்களுக்குப் பின், சுமார் 8 முதல் 9 ஆண்டுகள் வரையிலும் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் அருண் விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!
அப்போதுதான் அவரிடம், என்னிடத்தில் நல்ல கதை இருக்கிறது, அதை உங்களிடம் கூறவிரும்புகிறேன் என நான் தெரிவித்தேன். அதன் பின், ரெட்ட தல படத்தின் கதையைச் சொன்னேன். கதையையே கேட்டதும் அருண் விஜய் ஓகே எனக் கூறிவிட்டார்” என இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அருண் விஜய் வெளியிட்ட ரெட்ட தல படத்தின் டீசர் பதிவு
A storm of style. A milestone of impact 🔥#RettaThala teaser surpasses 1 Million+ views with roaring appreciation ❤️
Keep the madness going!
Watch The Teaser ▶️ https://t.co/aBENVXYokE
Produced By- @bbobby @BTGUniversal
Directed By- @KrisThiru1 @arunvijayno1… pic.twitter.com/1DKiYMNWIx
— ArunVijay (@arunvijayno1) August 8, 2025
இந்த ரெட்ட தல படத்தின் டீசரானது சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் நடிகை சித்தி இத்னானி முன்னணி கதாநாயகியாக நடிக்க, நடிகை தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.