Suriya46: சூர்யா படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் பட நடிகை.. வைரலாகும் பதிவு!
Raveena Tandon join Suriya46: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இதில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் நடிக்கும் படம்தான் சூர்யா46. இந்த படத்தில் கேஜி.எஃப் பட நடிகை இணைந்துள்ளார்.

சூர்யா 46
நடிகர் சூர்யா (Suriya) மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த திரைப்படமானது கடந்த 2025 மே மாதத்தில் பூஜைகளுடன் ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இந்த திரைப்படத்தில் சூர்யா முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்து வருகிறார். இப்படத்தை சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனமானது தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். இந்த சூர்யா46 படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவரும் நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு பிரபல பாலிவுட் நடிகையும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, கே.ஜி.எஃப் படத்தில் நடித்த நடிகை ரவீனா டாண்டன்தான் (Raveena Tandon). இவர் இந்த சூர்யா46 படத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் கூறுகிறது.
இதையும் படிங்க : படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்!
சூர்யா46 படத்தில் நடிகை ரவீனா டாண்டன் இணைந்தது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Wishing the ever-graceful @TandonRaveena a very Happy Birthday! 💫 – Team #Suriya46
So glad to have you onboard… looking forward to an amazing journey ahead! 🌟#HBDRaveenaTandon @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @gvprakash @vamsi84 @NimishRavi… pic.twitter.com/DUVM6xoEpv
— Sithara Entertainments (@SitharaEnts) October 26, 2025
இன்று 2025 அக்டோபர் 26ம் தேதியில் நடிகை ரவீனா டாண்டன் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டுதான் சூர்யா46 படக்குழு இவர் இப்படத்தில் நடிக்கிறார் என அறிவித்துள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த படமும் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவருகிறது.
சூர்யா46 படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த சூர்யா46 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடைத்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தின் பாதி காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரம் போலத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இப்படித்தான் நீங்கள் வலியை கலையாக மாற்றுகிறீர்கள் – பைசன் படத்தைப் பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!
இந்த படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மே மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை அடுத்ததாக சூர்யா மலையாள இயக்குநரான ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 படத்தில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.