Youth Movie: கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்.. நகைச்சுவையாக வெளியான வீடியோ இதோ!

Youth Movie First Song Update: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடிக்க தொடங்கி, தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் கென் கருணாஸ். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் யூத் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

Youth Movie: கென் கருணாஸின் யூத் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்.. நகைச்சுவையாக வெளியான வீடியோ இதோ!

யூத் திரைப்படம்

Updated On: 

05 Feb 2026 21:33 PM

 IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் கருணாஸ் (karunas). இவரின் மகன்தான் கென் கருணாஸ் (Ken karunas). இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். ரகளபுரம், அழகு குட்டி செல்லம், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இதைத்தடுக்க தனுஷின் (Dhanush) அசுரன் (Asuran), வாத்தி (Vaathi) போன்ற சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக வெற்றிமாறனின் விடுதலை 2 (Viduthalai 2) படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் “யூத்” (Youth) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தை கென் கருணாஸ் மற்றும் அவரின் நண்பர்கள் இணைந்து இயக்கிவருகின்றனர்.இந்த படத்தை பர்வதா என்டேர்டைமென்ட் என்ற நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு முழுவதும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்த நகைச்சுவை புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இதன் முதல் பாடல் வரும் 2026 பிப்ரவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: நீக்கப்பட்ட காட்சிகளுடன்.. ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் ‘தி ராஜா சாப்’.. எப்போது தெரியுமா?

ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்த யூத் படத்தின் முதல் பாடல் புரோமோ பதிவு:

இந்த யூத் திரைப்படத்தில் கென் கருணாஸ் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் நடிகர்கள் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதில் கென் கருணாஸுக்கு ஜோடியாக சிறை பட புகழ்பெற்ற நடிகை அனிஷிமா அனில்குமார் நடித்துவருகிறார். இது இவருக்கு 2வது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூத் திரைப்படமானது பள்ளிப்பருவ காதல், நட்பு மற்றும் குடும்ப சூழ்நிலை என வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருகிறது.

இதையும் படிங்க: இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் இன்று… 11 வருடங்களை கடந்தது என்னை அறிந்தால் படம்!

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தில் கிட்டத்தட்ட 5 பாடல்கள் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதல் பாடலின் வரிகளை கென் கருணாஸ் எழுதியுள்ள நிலையில், அவரே பாடலையும் படவுள்ளாராம் இந்த யூத் படத்தின் முதல் பாடல் வரும் 2026 பிப்ரவரி 7ம் தேதியில் மாலை 5 மணியளவில் படக்குழு வெளியியவுள்ளது. தற்போது இது குறிதான நகைச்சுவை புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து
இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் சுங்க வரி 18 சதவிகிதமாக குறைப்பு
தொண்டையில் சிக்கிய அட்டை பூச்சி - 55 வயது நபரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
ரூ.2 கோடிக்கு அரிய வாகன நம்பர் பிளேட்டை வாங்கிய நபர்..