kayadu Lohar: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க – கயாடு லோஹர் சொன்ன பதில்!

kayadu Lohar About Tamil Learning: தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் நடிகைகளில் ஒருவராக கலக்கிவருபவர் கயாடு லோஹர். சமீபத்தில் பள்ளிச்சட்டம்பி படம் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழில் ஏன் பேசுவதில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

kayadu Lohar: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க - கயாடு லோஹர் சொன்ன பதில்!

கயாடு லோஹர்

Updated On: 

31 Mar 2026 15:39 PM

 IST

நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு, தொடர்ந்து புது புது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது. அந்த விதத்தில் மலையாளத்தில் டோவினோ தாமஸுக்கு (Tovino Tomas) ஜோடியாக இவர் நடித்துள்ள புது படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இந்த படமானது அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதையில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதையடுத்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில், தமிழ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பள்ளிச்சட்டம்பி படக்குழு கலந்துகொண்டிருந்தது. அதில் கயாடு லோஹரிடம் தமிழில் பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன? நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

தமிழில் பேசாசதற்கான காரணத்தை தெரிவித்த நடிகை கயாடு லோஹர்:

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கயாடு லோஹர் பேசுகையில், “ரொம்பவே கஷ்டமான கேள்வியா இருக்கு. நான் தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் நடித்துவருகிறேன். நான் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் இல்லை. இந்த மொழிகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கு பேச தெரிந்தவரை பேசியிருக்கிறேன். எனக்கு தெரியும் வெவ்வேறு மொழிகளில் நடிப்பதை எப்படி இருக்கும், அந்த மொழியில் எவ்வாறு பேசவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். நிச்சயமாக 100 சதவீதம் தமிழில் பேச கற்றுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் – அட்லீ ஓபன் டாக்!

எனக்கு கொஞ்ச நேரம் கொடுங்க, கண்டிப்பாக சரளமாக தமிழில், மலையாளத்தில் பேச கற்றுக்கொள்கிறேன். தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் தொடர்ந்து நடிப்பது கஷ்டமதான். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும், அடுத்தமுறை புரொமோஷனில் சரளமாக பேச முயற்சிக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகை கயாடு லோஹர் போட்டோஷூட் பதிவு:

நடிகை கயாடு லோஹர், டிராகன் படத்தை தொடர்ந்து தமிழில் இதயம் முரளி மற்றும் இம்மார்ட்டல் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இந்த படங்களில் ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..