மாஸ்க் படத்திலிருந்து வெளியானது கண்ணு முழி பாடல் வீடியோ!
Mask Movie Kannumuzhi Lyrical | நடிகர் கவின் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படத்தில் இருந்து பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாஸ்க்
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக உள்ளார் நடிகர் கவின் (Actor Kavin). இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கிஸ். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவினின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் கவின் தற்போது மாஸ்க் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மையா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை ருகானி ஷர்மா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சார்லி, பால சரவணன், மற்றும் விஜே அர்ச்சனா சந்தோக் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் எழுதி இயக்கி உள்ளார். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் எஸ்.பி. சொக்கலிங்கம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மாஸ்ப் படத்திலிருந்து வெளியானது கண்ணு முழி பாடல் வீடியோ:
இந்தப் படத்தில் இருந்து தற்போது கண்ணு முழி என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் பாடகர்கள் ஆண்டனி தாசன் மற்றும் சுப்லக்ஷினி இணைந்து பாடலைப் பாடியுள்ளனர். மேலும் இந்தப் பாடலை கருமாத்தூர் மணிமாறன், கபேர் வாசுகி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
https://t.co/H3SvCnYg2w here is my first single for #mask … kannu Muzhi is here … @Kavin_m_0431 #vetrimaaran @andrea_jeremiah
— G.V.Prakash Kumar (@gvprakash) October 6, 2025
Also Read… குறட்டையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ