கருப்பு ஆடியோ லாஞ்ச்… புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Karuppu Movie Audio Launch Update: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் வருகின்ற மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கருப்பு ஆடியோ லாஞ்ச்... புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு

கருப்பு

Published: 

25 Apr 2026 13:57 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ என்ற ஒரே ஒரு படம் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

கருப்பு இசை வெளியீட்டு விழாவிற்கு புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு:

பல சிக்கல்களை தாண்டி தற்போது கருப்பு படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 26-ம் தேதி மதுரையில் நடைபெறுகின்றது. இது தொடர்பான புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Atlee: மீண்டும் இணையும் கூட்டணி.. அட்லீ இணையும் புது படம் யாருடன் தெரியுமா?

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Yogi Babu: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு!

Follow Us
ஈரானின் நடவடிக்கையால் உலக அளவில் இண்டர்நெட் சேவை பாதிப்பு? அதிர்ச்சி தகவல்
எறும்புகளை துன்புறுத்தும் சர்ச்சை வீடியோ - நெட்டிசன்கள் எதிர்ப்பு
வங்கியின் அலட்சியத்தால் வாடிக்கையாளருக்கு ரூ. 3.21 லட்சம் இழப்பீடு
உலகின் வெப்பமான நகரங்களின் பட்டியிலில் இந்தியாவின் 19 நகரங்கள்