Karthik Subbaraj : சூர்யாவின் ரெட்ரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட ஆசை.. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

Karthik Subbaraj About Retro Movie Extended Cut : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ.. நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட ஆசை என்று கூறியிருக்கிறார்.

Karthik Subbaraj : சூர்யாவின் ரெட்ரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட ஆசை.. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யாவின் ரெட்ரோ

Published: 

17 Jun 2025 17:44 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இணைந்து, அவருடன் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம்தான் நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் தமிழில் வெளியான 3வது திரைப்படமாகும். இந்த ரெட்ரோ படத்தைத் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X)  படம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில் இந்த ரெட்ரோ படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

உலகளாவிய வசூலில் சுமார் ரூ 235 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. திரையரங்குகளில் வரவேற்பை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் ஆவர் ரெட்ரோ படத்தினை தொடராக, நீடிக்கப்பட்ட காட்சிகளுடன்  (extended scenes) வெளியிட திட்டமிட்டிருந்ததாக்கக் கூறியுள்ளார். இதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் ரெட்ரோ ரிலீஸ் பதிவு :

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படம் ஓடிடி ரிலீஸ் பற்றி பேச்சு

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படம் பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர், “ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் , ரெட்ரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை ஒரு 3-4 மாதங்களில் வெளியிடவேண்டும் என்று பேசியிருக்கிறேன். இந்த காட்சிகள் மிகவும் ஆழமான உணர்ச்சிகளையும், விவரமான அதிரடி காட்சிகளும் இருக்கும். அந்த போன்று ஓடிடியில் வெளியிடவேண்டும் என்று நான் நினைத்தேன் மேலும், ஓடிடி நிறுவனங்களிடமும் பேசினேன் ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால் நான் அவ்வாறு வெளியிடுவதற்கு முயற்சி செய்துதான் வருகிறேன், ஏனென்றால் ரெட்ரோ படம் எடுக்கும்போதே நான் மிகவும் மகிழ்ச்சியாகதான் எடுத்தேன். இந்த ரெட்ரோ படங்களை ஒரு 40 நிமிட எபிசோடாக் வெளியிட்டால் சுமார் 4- 5 எபிசோடு வரும். இன்னும் அந்த படத்தில் கதையான மதம் சார்ந்த, காமெடி சார்ந்த மற்றும் கல்ட் போன்ற கதைக்களம் இன்னும் ஆழமான கதை இருக்கிறது” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார்.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?