கன்னட மொழி சர்ச்சை… கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மிரட்டல்

கன்னட மொழி சர்ச்சை குறித்து நடிகர் கமல் ஹாசன் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இதற்கு கமல் ஹாசன் பதிலளித்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தற்போது கமல் ஹாசனுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

கன்னட மொழி சர்ச்சை... கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மிரட்டல்

கமல் ஹாசன்

Published: 

30 May 2025 11:03 AM

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல் ஹாசனின் அழைப்பை ஏற்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார். அப்போது விழாவில் சிவராஜ்குமார் குறித்து கமல் ஹாசன் பேசுகையில் அவர் நமது சொந்தம் தான் ஏன்னா தமிழில் இருந்து பிரிந்ததுதான் கன்னட மொழி என்று தெரிவித்தார். இது இணையத்தில் வைரலான நிலையில் கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கன்னட அமைப்புகள் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மட்டும் இன்றி கமல் ஹாசனின் பானர்களை கிழிப்பது என தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

கர்நாடக அமைச்சரின் மிரட்டலும் கமலின் பதிலும்:

கன்னட மொழி சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடகி கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நடிகர் கமல் ஹாசன் மொழி குறித்து எந்த அரசியல்வாதியும் பேச தகுதி இல்லை. ஏன் எனக்கும் அந்த தகுதி இல்லை. மொழி குறித்து ஆய்வாளர்களும் வல்லுநர்களுக்கு மட்டுமே பேச தகுதி உள்ளது என்று மாஸாக கொடுத்தப் பதில் இணையத்தில் வைரலானது.

கமல் ஹாசன் கொடுத்த விளக்க வீடியோ:

கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த சிவராஜ் குமார்:

கன்னட நடிகர் சிவராஜ் குமார் இந்த சர்ச்சை குறித்து பேசுகையில் அவர் அப்படி என்ன பேசினார் என்று எனக்கு புரியவில்லை. மேலும் கன்னட மொழி மீது பற்று எங்களுக்கும் உள்ளது. மொழிக்காக உயிரையும் கொடுப்போம் ஆனால் ஏதாவது பிரச்னை பன்னவேண்டும் என்பற்காக மொழிப் பற்றி இருப்பது போல காட்டிக் கொள்ளக்கூடாது.

மேலும் கமல் ஹாசன் மிகப் பெரியவர். அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று மேலும் அவர் அப்படி தவறாகப் பேசினார் என்று தோன்றினால் அவர் இங்கு இருக்கும்போதே கேட்டிருக்கலாமே என்று நடிகர் சிவராஜ் குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மிரட்டல்:

இந்த நிலையில் இதுவரைக்கும் கன்னட மொழி சர்ச்சை குறித்து நடிகர் கமல் ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தற்போது கமல் ஹாசனுக்கும் மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், கமல் ஹாசன் நிச்சயமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட மாட்டோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.