இங்குள்ள தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது… – தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து

Karnataka Deputy CM Responds to Thug Life Controversy : கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இங்குள்ள தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது... - தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து

தக் லைஃப் சர்ச்சை குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

Published: 

02 Jun 2025 20:54 PM

 IST

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) நடித்துள்ள தக் லைஃப் (Thug Life) படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவராஜ்குமாரைக் குறிப்பிட்டு தமிழிலிருந்து வந்தது அவரது மொழி என்று பேசியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கன்னட அமைப்பினர் தக் லைஃப் படம் வெளியானால் திரையரங்குகளில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படத்தில் கர்நாடகாவில் வெளியிட தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் மீதான தடையை நீக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் சர்ச்சை குறித்து கர்நாடகா துணை முதல்வர்

இந்த நிலையில் தக் லைஃப் சர்ச்சை குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளதாவது, நாம் அண்டை மாநிலத்தவர்கள், நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம். வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்குள்ள தண்ணீர் தமிழகத்திற்கு செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். நாம் எதிரிகளில்லை. நண்பர்கள். மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்கு தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 3 நாட்களில் திரையரங்குகளில் தக் லைஃப்

 

கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு

இதன் ஒரு பகுதியாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர்கள் அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் தக் லைஃப் விவகாரத்தில் சட்ட ரீதியாக ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதியளிக்கிறார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் சித்தராமையாவின் ஆதரவு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

தான் இயக்குவதற்காக வைத்திருந்த அமர் ஹாய் என்ற கதையை கேட்ட மணிரத்னம் அதனை தனது ஸ்டைலில் திரைக்கதையை மாற்றி தக் லைஃப் படமாக உருவாக்கியிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கமலின் அமர் ஹாய் படம் தான் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் கமல்ஹாசன், வடிவேலு நடிப்பில் உருவாக இருந்ததாகவும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க விருந்ததாகவும் பேட்டிகளில் கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..