இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜோஷ்வா இமை போல் காக்க படம் – வீடியோ வெளியிட்டு கொண்டாடும் படக்குழு
2 Years Of Joshua: Imai Pol Kaakha Movie | தமிழ் சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் ஜோஷ்வா இமைப் போல் காக்க. இந்தப் படம் தற்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது.

ஜோஷ்வா இமை போல் காக்க படம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீடியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜோஷ்வா இமை போல் காக்க படம். இந்தப் படத்தில் நடிகர் வருண் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இதனால் இவர் தமிழக மக்களிடையே நன்கு பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வருண் நடிப்பில் வெளியான ஜோஷ்வா இமை போல் காக்க படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் வருண் உடன் இணைந்து நடிகர்கள் ராஹேய்,
கிருஷ்ணா, கிட்டி, மன்சூர் அலி கான், விசித்ரா, திவ்யதர்ஷினி, லிசி ஆண்டனி, நிஷாந்த் ராமகிருஷ்ணன், சாய் சித்தார்த், ஒஸ்தே ஜே. ராம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.
இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜோஷ்வா இமை போல் காக்க படம்:
இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தான் தயாரித்து இருந்தார். இந்தப் படத்தில் தனது காதலிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் ஒரு நாயகனாக நடிகர் வருண் நடித்து இருந்தார். இவர் ஐசரி கே கணேஷின் சகோதரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… இதயம் முரளி படம் மிகவும் ஜாலியாக இருக்கும் – நடிகர் அதர்வா
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
2 Years of Joshua 🔥
Protect like an eyelid. Strike like a storm. Varun as #Joshua – sharp, silent, unstoppable.#2YearsofJoshua @iamactorvarun @IshariKGanesh @menongautham pic.twitter.com/swpcEvOKwP
— Vels Film International (@VelsFilmIntl) March 1, 2026