விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் – என்ன நடந்தது?
Actor Joju George: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் அவ்வபோது தமிழ் சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உட்பட படக்குழுவினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் (Actor Joju George). இவர் தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் தமிழர்களாக போராடும் சிவதாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் புத்தம் புது காலை விடியாதா, பஃபூன், ரெட்ரோ மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார். இதில் இந்த ஆண்டு வெளியான ரெட்ரோ படத்தில் சூர்யாவின் வளர்ப்பு தந்தையாக தனது மாஸான நடிப்பை நடிகர் ஜோஜூ ஜார்ஜ் வெளிபடுத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் என்றப் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிகர் கமல் ஹாசனுடன் சண்டையிடும் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர். தொடர்ந்து தனது மாஸான நடிப்பின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நபராக நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மாறியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் அடுத்ததாக ஒரு பிரபல இயக்குநரின் இயக்கத்தில் முன்னணி வேடத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூணாரில் படப்பிடிப்பின் போது ஜீப் விபத்தில் காயமடைந்த நடிகர் ஜோஜு ஜார்ஜ்:
இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது வரவு என்ற படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் மூணாரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தபோது நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஓட்டிவந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஜோஜூ ஜார்ஜ் உட்பட படக்குழுவினருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஒரு ஆண்டை நிறைவு செய்த லப்பர் பந்து… இயக்குநர் சொன்ன குட் நியூஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் ஜோஜூ ஜார்ஜின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… கிஸ் படத்தின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்த நெல்சன் திலீப் குமார்