சந்தானத்திற்கு நிஜமாவே அந்த சீன்ல தூக்கம் வந்துட்டு இருந்தது – சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த ஜீவா
Actor Jiiva: நடிகர் சந்தானம் வெள்ளித்திரையில் காமெடி நடிகராகவே அறிமுகம் ஆனார். இவர் பல நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் ஜீவா சந்தானத்துடன் நடித்த அனுபவம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

சந்தானம் மற்றும் ஜீவா
கோலிவுட் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நடிகர் ஜீவ (Actor Jiiva). இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அகத்தியா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த அனுபவம் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிவா மனசுல சக்தி.
இதில் நாயகனாக நடிகர் ஜீவா நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அனுயா பகவத், சந்தானம், ஊர்வசி, சினேகா முரளி, ஜி.ஞானசம்பந்தம், சத்யன், ஆனந்தசாமி, மகாநதி சங்கர், ஆர்யா, ஷகீலா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்த்தானத்துடன் நடித்த அனுபவத்தை நடிகர் ஜீவா வெளிப்படையாக பேசியுள்ளார்.
சந்தானத்துடனான காமெடி சீன் குறித்து பேசிய ஜீவா:
அதன்படி சிவா மனசுல சக்தி படத்தில் அந்த இரவுக் காட்சி எடுக்கும் போது நடிகர் சந்தானத்திற்கு நிஜமாகவே தூக்கம் வந்தது. அப்போ நல்ல பனிவேற. சட்டை இல்லாமல் இருந்த சந்தானம் பாயுடன் வந்து நின்றார். அந்தக் காட்சி ப்ளான் பண்ணி எல்லாம் செய்யவில்லை. எதார்த்தமாக செய்தது. சட்டை இல்லாமல் குளிர் அடிக்கும் என்று பாயை சுத்திக்கொண்டு சந்தானம் வந்து நின்றார்.
இந்த மாதிரி சிவா மனசுல சக்தி படத்தில் நிறைய காட்சிகளை இயல்பாகவே எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் ஆராவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் என்று நடிகர் ஜீவா அவரது பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தயாரிப்பாளர்களாக லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் – துல்கர் சல்மான் சொன்ன விசயம்
நடிகர் ஜீவா பதிவிட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… கோபம்.. கொந்தளிப்பு.. அனல் பறக்கும் மலையாள பிக்பாஸ்.. மோகன்லாலை பின்தொடர்வாரா விஜய்சேதுபதி?