Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்தியின் ஹிட் பட இயக்குநரிடம் கதை கேட்ட விக்ரம்?

Actor Vikram Movie Update: நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வீர தீர சூரன் படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களில் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

கார்த்தியின் ஹிட் பட இயக்குநரிடம் கதை கேட்ட விக்ரம்?
விக்ரம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 May 2025 11:32 AM

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் (Actor Vikram). சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த நடிகர் விக்ரம் பிரபல நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் குரல் கொடுத்தார். அதனை தொடர்ந்து நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவில் நாயகனாக தனது பயணத்தை தொடங்கினார். சினிமாவிற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யும் நடிகர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் நிச்சயமாக நடிகர் விக்ரம் இருப்பார் என்றே சொல்லலாம். ஒரு படத்திற்காக தனது தோற்றத்தை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி மிகவும் அற்பணிப்போடு நடிப்பவர் நடிகர் விக்ரம். இதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் மட்டுமே அதிகம் ஹேட்டர்ஸ் இல்லை என்றே சொல்லாம்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது தனது 63-வது படத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். இந்தப் படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் விக்ரமின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)

மெய்யழகன் பட இயக்குநரிடம் கதை கேட்ட விக்ரம்?

இந்த நிலையில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மெய்யழகன் படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமாரிடம் நடிகர் விக்ரம் கதை கேட்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் பிரேம் குமார் விக்ரமிடம் கூறிய கதை பிடித்துவிட்டதாகவும் விரைவில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன பிரேம் குமார் சமீபத்தில் மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

எதிர்பாராத சூழல் காரணமாக சொந்த வீடு மற்றும் ஊரை விட்டு வெளியூர் செல்லும் குடும்பம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு வரும் போது அந்த நபர் மீது பேரன்பு வைத்திருக்கும் நபரை பார்த்து பிரமிக்க வைக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்பது போல அந்தப் படத்தில் அத்தனை கதாப்பாத்திரமும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.