லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Lokesh Kanagaraj DC Film Release Update: தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் டிசி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

டிசி படம்

Published: 

31 Jan 2026 17:12 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை திரையரங்குகளில் வெளியான கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ மற்றும் கூலி ஆகியப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து படங்களை இயக்கி இயக்குநராக வலம் வந்த லோகேஷ் கனகாஜ் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்த அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி அவர் தற்போது நாயகனாக ஒரு படத்தில் அடித்து வருகிறார். அந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த டிசி படத்தின் டைட்டில் டீசர் வெளியான போதே அதில் லோகேஷ் கனகராஜ் உடல் முழுவதும் ரத்தத்துடன் நடந்துவரும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை வமிகா கபி நாயகியாக நடித்து வரும் நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் அல்லது ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரஜினிகாந்த் எழுதும் கதை.. நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லாக்டவுன் முதல் காந்தி டால்க்ஸ் வரை… நாளை ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

14 நாட்களிலேயே ஓடிடியில் வெளியான கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்
எங்கள் எதிர்வினை வருத்தத்துகுரியதாக இருக்கும்.... ஈரான் அரசு எச்சரிக்கை
மோகன்லாலின் எல்367 படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் உள்ள தொடர்பு?
குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ