பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? வைரலாகும் தகவல்

Pa Rajith Vettuvam Movie Release Date Viral On Social Media: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வேட்டுவம். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது? வைரலாகும் தகவல்

வேட்டுவம்

Published: 

27 Mar 2026 15:37 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அட்டக்கத்தி படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன போது மிகவும் ஜாலியான படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அரசியலையும், மக்களையும் இந்த சமூகத்தையும் மையமாக வைத்து உருவாக்கி ரசிகர்களிடையே தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். அதன்படி இவர் எந்த மாதிரியன படத்தை இயக்கினாலும் அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர்கள் விக்ரம் மற்றும் பார்வதி திருவோத்து பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேட்டுவம். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சயின் பிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் படம் வேட்டுவம். இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, தினேஷ் மற்றும் ஷோபிதா துலிபா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான வீடியோ ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றனர் என்று இயக்குநர் பா ரஞ்சித் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வேட்டுவம் படம் வருகின்ற ஜூலை மாதம் 2026-ம் அண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ராம் சரண் பர்த்டே ஸ்பெஷல்… பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடி இவரா? வைரலாகும் தகவல்

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..