பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை

Director Bharathiraja Health Update: பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை

பாரதிராஜா

Published: 

05 Jan 2026 15:32 PM

 IST

சென்னை, ஜனவரி 5 : தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் (Director) ஒருவரும் ரசிகர்களால் இயக்குநர் இமயம் என அழைக்கப்படுபவருமான பாரதிராஜா சமீப காலமாக திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறுவிதமாக தகவல் பரவிவரும் நிலையில்,  அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அவர் கடுமையான நுரையீரல் (Lung) தொற்று காரணமாக அவர் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இயக்குநர் பாரதிராஜா தனது மகள் வசிக்கும் மலேசியாவில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் சென்னை திரும்பினார். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா வீடு திரும்பினார்.

இதையும் படிக்க : Mysskin: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் முன் மீண்டும் மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரதிராஜாவுக்கு என்ன பாதிப்பு?

அந்த மருத்துவ அறிக்கையில், “இயக்குநர் பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான அனைத்து தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும், அவர் மேலும் சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை பெற வேண்டியிருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பராசக்தியில் அறிஞர் அண்ணா பேசும் வசனத்தை கவனித்தீர்களா? வைரலாகும் வீடியோ

பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் நிம்மதி அடைந்துள்ளனர். பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு விரைவான குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத படங்களை வழங்கிய பாரதிராஜா, விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மட்டும் இல்லையா?
பிறந்தது புத்தாண்டு.. இந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்களின் லிஸ்ட் இதோ
இண்டிகோ விமான ஜன்னலில் கிறுக்கப்பட்ட பெயர் - வெளியான போட்டோவால் அதிர்ச்சி
தந்தை - மகளை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை - பணியாளர்கள் செய்த கொடூரம்