2025-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்? – லிஸ்ட் இதோ!

Actress 2nd Marriage List: இந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலருக்கு தொடர்ந்து திருமணங்கள் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்ட செய்தியும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் நடிகைகள் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது குறித்து தற்போது பார்க்கலாம்.

2025-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்? - லிஸ்ட் இதோ!

பிரபலங்கள்

Published: 

25 Dec 2025 23:11 PM

 IST

பிரியங்கா தேஷ்பாண்டே: விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ரன்னரப்பாக வெற்றிப் பெற்ற பிரியங்கா தேஷ்பாண்டே தொடர்ந்து மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இது மட்டும் இன்றி சினிமா நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. தன்னுடன் பணியாற்றியவரையே முதல் திருமணம் செய்துக்கொண்ட பிரியங்கா அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகளாக சிங்கிளாக வாழ்ந்து வந்த பிரியங்கா தற்போது இரண்டாவது திருமணத்தை இந்த 2025-ம் ஆண்டு செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாவ்னி ரெட்டி: சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை பாவ்னி ரெட்டி. இவரது நடிப்பில் வெளியான சீரியல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காதலித்து திருமணம் செய்தவர் சில பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இந்த நிலையில் சீரியல்களில் பிரபலம் ஆனதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

Also Read… ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது தாய் கிழவி படத்தின் டீசர்

சம்யுக்தா சண்முகம்: மாடலிங் துறையில் பிரபலமாக வலம் வருபவர் சம்யுக்தா சண்முகம். இவர் மாடலிங் துறையில் இருந்த போது பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கத் தவறிய நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் அண்ணி வேடம் அக்கா வேடத்தில் நடித்து வருகிறார். இவரது முதல் திருமணத்தில் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்த சம்யுக்தா சண்முகம் இந்த 2025-ம் ஆண்டில் இரண்டாவது திருமணத்தை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நோ சூர்யா.. நோ அமீர்கான்.. டோலிவுட் நடிகரை நோக்கிச் செல்லும் லோகேஷ் கனகராஜ்

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?