அஜித் குமார் பர்த்டே ஸ்பெஷல்… தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ
Thala Ajith Kumar's birthday Special Re Release Movies: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நாளை தனது 55-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.

அஜித் குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). கடந்த 1993-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி (Amaravathi Movie) என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனார். சினிமாவில் எந்தவிதமான சப்போர்ட்டும் இல்லாமல் சொந்த முயற்சியில் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது இந்த இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். மேலும் அஜித் குமாரின் ரசிகர் (Ajith Kumar Fans) என்று சொல்லுவதையே அவரின் ரசிகர்கள் பெருமையாக நினைப்பார்கள். மேலும் அஜித் குமார் குறித்து அவர்கள் உயர்வாக பேச அவரின் உழைப்பையே கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதுவரை 63 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பான்மையான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் அடுத்தடுத்து நடிகர் அஜித் குமார் நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது
அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் படங்கள்:
இந்த நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி பிறந்த நடிகர் அஜித் குமார் நாளை மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு தனது 55-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான பில்லா, அமர்களம், வாலி மற்றும் ஆழ்வார் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது. அஜித் குமார் ரசிகர்களுக்கு இது நிச்சயமாக ட்ரீட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை – பேசில் ஜோசப்