Harish Kalyan: நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு குட்டி தேவதை பிறந்துள்ளது.. அவரே அறிவித்த பதிவு!
Harish Kalyan & Narmada Welcome Baby: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் கடந்த 2022ம் ஆண்டில் தனது காதலியான நர்மதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 2ம் தேதியில் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதாம். இதை ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் தம்பதி
கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). இவரின் நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக டீசல் (Diesel) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இவர் கடந்த 2022ம் ஆண்டில் நர்மதா உதயகுமார் (Narmada Udayakumar) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றிருந்தது. ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா இருவரும் மிகவும் நெருக்கமான தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமண உறவும் உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை (Baby Girl) பிறந்துள்ளதாம்.
இன்று 2026 பிப்ரவரி 2ம் தேதியில், தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த குழந்தைக்குதான் சூர்யா தங்க சங்கிலி போட்டாரா? வைரலாகும் வீடியோ
தனக்கு குழந்தை பிறந்தது குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Elated to share the most wonderful news with all my dear family ❤️🤗
God willing 🙏 pic.twitter.com/11Icq8OMMz
— Harish Kalyan (@iamharishkalyan) March 2, 2026
அந்த பதிவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், “என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரிபிரபலன்கள் என பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படங்க: KH X RK புரோமோ பிளான் பண்ணி பண்ணவில்லை.. அனிருத் சொன்ன விஷயம்!
நடிகர் ஹரிஷ் கல்யாண், கடந்த 2010ம் ஆண்டில் வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நுழைந்தார். தனது முதல் படத்திலே பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதை தொடர்ந்து இவர் ஆரம்பத்தில் நடித்துவந்த பல படங்கள் தோல்வியை தழுவியது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் இவர் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான லப்பர் பந்து என்ற படமானது இவருக்கு மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து தற்போது தாஷமக்கான் மற்றும் நூறுகோடி வானவில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் தாஷமக்கான் படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.