ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த பியானோ.. எஞ்சாமி பாடலின் நியூ வெர்சனை இசைத்த ஜி.வி.பிரகாஷ்!
GV Prakash Kumar: ஜி.வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில், இவருக்கு பரிசாக ஏ.ஆர். ரஹ்மான் பியானோ ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புதிய பியானோவில், இட்லி கடை பாடலை இசைத்தபடி ஜி.வி. பிரகாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). பின்னர் இவர் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து, தொடர்ந்து ஹீரோவாகவே பல படங்களில் நடிப்பதற்கு காரணமாக இருந்தது என்றே கூறலாம். மேலும் இசையமைப்பாளராகவும் தற்போது வரை பிரம்மாண்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தனுஷ், விஜய், (Vijay) அஜித், சூர்யா உட்பட பல்வேறு பிரபலங்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதும் (National Award) இவருக்கு சமீபத்தில் கிடைத்திருந்தது.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷை வாழ்த்தும் விதத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) , சமீபத்தில் பிரம்மாண்ட பியானோ ஒன்றை பரிசளித்திருந்தார். இது தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்து பதிவையும் வெளியிட்டிருந்தார்.




இதையும் படிங்க : ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்… மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!
இந்நிலையில் அந்த பியானோவில் ஜி.வி. பிரகாஷ், தனது இசையமைப்பில் சமீபத்தில் வெளியான இட்லி கடை பட பாடலுக்கு இசையமைத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இசையமைக்கும் வீடியோவை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமார்:
நூறு தலமுற சேர்ந்து செதுக்குன ஈர நிலமிது பாரய்யா ….@dhanushkraja @theSreyas @DawnPicturesOff @saregamasouth pic.twitter.com/C3n1rj7bG4
— G.V.Prakash Kumar (@gvprakash) October 2, 2025
தனுஷின் இட்லி கடை படத்தில் ஜி.வி. பிரகாஷ் :
நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷுடன் , நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார்.
இதையும் படிங்க : STR49 படம் வட சென்னை 2 இல்ல.. வெற்றிமாறன் பகிர்ந்த விஷயம்!
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்தது. இந்த இட்லி கடை படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் :
கடந்த 2023ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான படம் வாத்தி. இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்த நிலையில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது.
இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. இதை பாராட்டும் விதத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் பிரம்மாண்ட பியானோ ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.