மெண்டல் மனதில் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் போஸ்ட்

Mental Manadhil Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தொடர்ந்து படங்களை இயக்குவதைவிட அதிக அளவில் நடிகராக நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்கி வரும் மெண்டல் மனதில் படம் குறித்து புதிய தகவலை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

மெண்டல் மனதில் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் - வைரலாகும் போஸ்ட்

மெண்டல் மனதில்

Published: 

04 Dec 2025 22:37 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல பாடல்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இறுதியாக ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ப்ளாக்மெயில். பல ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் கிடந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் அடங்காதே,  இடிமுழக்கம், 13, மெண்டல் மனதில், இம்மார்டல் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மெண்டல் மனதில். இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வரும் நிலையில் நாயகியாக நடிகை மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 2024-ம் ஆண்டு முதல் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதில் இருந்து படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மெண்டல் மனதில் படம் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, லெஜெண்ட்ரி செல்வராகவன் சார் உடன் ஷூட்டிங்கில். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ரசிகர்களுக்கு இந்த மெண்டல் மனதில் படமும் அதன் இசையும் சிறப்பு விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார். அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… 33 ஆண்டுகளை நிறைவு செய்தது நாளைய தீர்ப்பு படம்… கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இதுக்கு இல்லையாங்க ஒரு என்ட்… பிக்பாஸில் தொடரும் சண்டை

ஹைதராபாத்தில் மேலும் ஒரு திரைப்பட நகரம் - வெளியான அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட உலகின் முதல் ஏலியன் கோவில் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தடைகளை வென்று மருத்துவரான 3 அடி மனிதர் - அவரது வெற்றிக்கான காரணம் இதுதான்
இறந்த பிறகும் 57 வருடங்களாக எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்