பூஜையுடன் தொடங்கியது ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அப்பாஸ் படம்!

GV Prakash and Abbas Movie Update: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பூஜையுடன் தொடங்கியது ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அப்பாஸ் படம்!

ஜிவி பிரகாஷ் குமார்

Published: 

06 Aug 2025 13:40 PM

தமிழ் சினிமாவில் இசையமைப்பளாராக தன்னை அறிமுகம் செய்து தற்போது நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இறுதியாக நாயகனாக நடித்தப் படம் கிங்ஸ்டன். கடல் சார்ந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகை திவ்ய பாரதி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் ஜோடி பேச்சுளர் படத்திற்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் பிசியாக இருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமார். இந்த நிலையில் தற்போது மீண்டும் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் லவ்வர் பட நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகர் அப்பாஸ் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் அப்பாஸ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூஜையுடன் தொடங்கியது ஜிவி பிரகாஷ் குமாரின் படம்:

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை நேற்று ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நாயகன், நாயகி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தை இதை ஜெயவர்தனன் பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார், ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். மேலும் இந்தப் படத்தை இளஞ்செழியன் இயக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… 3 BHK முதல் பறந்து போ வரை… ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சோசியல் மீடியாவில் இல்லாத அஜித் குமார்… ஷாலினி இன்ஸ்டாவில் ஃபாலோ செய்யும் ஒரே நடிகர் யார் தெரியுமா?