வித் லவ் முதல் யோகிடா வரை… இந்த வாரம் தியேட்டரின் என்ன படம் பார்க்கலாம்

This Week Theatre Release Movies List: தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் படங்கள் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் என்னென்ன படங்கள் என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

வித் லவ் முதல் யோகிடா வரை... இந்த வாரம் தியேட்டரின் என்ன படம் பார்க்கலாம்

படங்கள்

Published: 

05 Feb 2026 18:40 PM

 IST

வித் லவ்: தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவாகி உள்ள படம் வித் லவ். இந்தப் படத்தை இயக்குநர் மதன் இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை அனஸ்வரா ராஜான் நடித்துள்ளார். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் நடிகர் த்ரிஷா உடன் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து இருந்த நிலையில் படம் நாளை 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல் கதை சொல்லவா: இயக்குநர் சனில் கலத்தில் எழுதி இயக்கி உள்ள படம் காதல் கதை சொல்லவா. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் நகுல், ஜெயராம், ஆத்மிகா மற்றும் ரித்திகா சென் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் தற்போது படம் நாளை 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நாளை திரையரங்குகளில் வெளியாகும் வித் லவ் படம்… பிரிவியூ ஷோ பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

அனோமி தி ஈக்கிவேஷனாஃப் டெத்: நடிகர்கள் ரஹ்மான் மற்றும் பாவனா இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் அனோமி தி ஈக்கிவேஷனாஃப் டெத். சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரியாஸ் மாரத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலான நிலையில் தற்போது படம் நாளை 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

யோகிடா: நடிகை சாய் தன்ஷிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் யோகிடா. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சாய் தன்ஷிகா உடன் இணைந்து நடிகர்கள் சாயாஜி ஷிண்டே மற்றும் கபீர் துஹான் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலான நிலையில் தற்போது படம் நாளை 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Silambarasan: அஜித் குமாரை நேரில் சந்தித்த தருணம் – நெகிழ்ச்சியாக பேசிய சிலம்பரசன்!

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்