மதராஸி – காந்தி கண்ணாடி… இந்த வாரம் எந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க போறீங்க?
Theatre Release Movies: இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் சிறிய நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து வாரம் வாரம் புதுப் படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மதராஸி - காந்தி கண்ணாடி
மதராஸி: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருகும் படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் நாயகியாக நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் ஆகஷன் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் என். ஸ்ரீலட்சுமி பிரசாத் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
மதராஸி படத்தின் ட்ரெய்லர் இதோ:
பேட் கேர்ள்: வர்ஷா பரத் எழுதி இயக்கிய ஒரு புதிய தலைமுறை நாடகம் படம் தான் பேட் கேர்ள். இந்தப் படத்தை க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி புரடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் பல பிரச்னைகளை சந்தித்த இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.
பேட் கேர்ள் படத்தின் டீசர் இதோ:
காந்தி கண்ணாடி: சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் பாலா. இவர் பல சமூக சேவைகளை செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் நாயகனாக நடித்துள்ள படம் காந்தி கண்ணாடி. இது இவர் நாயகனாக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஷெரிஃப் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்ரமணியன், ஆராத்யா, ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.