வீக் எண்ட் வந்தாச்சு… ஓடிடியில் என்ன படம் பார்க்க போறீங்க?

What to Watch: தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது போல ஓடிடியிலும் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

வீக் எண்ட் வந்தாச்சு... ஓடிடியில் என்ன படம் பார்க்க போறீங்க?

படங்கள்

Published: 

12 Jun 2025 22:06 PM

டிடி நெக்ஸ்ட் லெவல்: இயக்குநர் பிரேம் ஆனந்த் (Director Prem Anand) இயக்கத்தில் நடிகர் சந்தானம் (Actor Santhanam) நடித்த படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாரர் காமெடியை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் யாசிகா ஆனந்த், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து ஹாரர் காமெடி படங்கள், காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து நடிகர் சந்தானம் நடித்து வரும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

லெவன்: நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் லெவன். இந்தப் படத்தை இயக்குநர் லோக்கேஷ் அஜல்ஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நவீன் சந்திரா உடன் இணைந்து நடிகர்கள் ரேயா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா, அர்ஜை, கிரீட்டி தாமராஜு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் நாளை 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலப்புழா ஜிம்கானா: நடிகர் நஸ்லேன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஆலப்புழா ஜிம்கானா. இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.