3 BHK முதல் பறந்து போ வரை… ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!
August Month OTT List: கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அதே போல ஒவ்வொரு மாதம் ஓடிடியிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அதன்படி திரையரங்குகளில் அந்தப் படத்தைப் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

படங்கள்
3 BHK படம்: நடிகர் சித்தார்த் (Siddharth) நாயகனாக நடித்து கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் சித்தார்த்தின் அப்பாவாகவும், நடிகை தேவையானி சித்தார்த்தின் அம்மாவாகவும் நடிகை மீத்தா ரகுநாத் சித்தார்த்தின் தங்கையாகவும் நடித்து இருந்தார். மேலும் படத்தில் நடிகை சைத்ரா ஜே ஆச்சார் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகிபாபு, விவேக் பிரசன்னா, சுப்பு பஞ்சு மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் கடந்த 1-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
3 BHK படத்தின் ட்ரெய்லர் இதோ:
லவ் மேரேஜ்: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் மேரேஜ். இயக்குநர் ஷண்முகப் பிரியன் இந்தப் படத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் இந்த மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லர் இதோ:
பீனிக்ஸ்: நடிகர் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகம் ஆன படம் பீனிக்ஸ். இந்தப் படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ளார். இயக்குநராக அனல் அரசு அறிமுகம் ஆகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பீனிக்ஸ் படத்தின் ட்ரெய்லர் இதோ:
பன் பட்டர் ஜாம்: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ராஜூ ஜெயமோகன் நாயகனாக நடித்த படம் பன் பட்டர் ஜாம். இந்தப் படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இந்தப் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதியா பிரசாத், பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பன் பட்டர் ஜாம் படத்தின் ட்ரெய்லர் இதோ:
பறந்து போ படம்: நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் இந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.