Bison: துருவ் விக்ரமின் ‘பைசன்’.. தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

Bison Movie Tamilnadu Release Rights Update : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம் பைசன். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து வரும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. அது என்ன என்பதைப் பற்றிய அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

Bison: துருவ் விக்ரமின் பைசன்.. தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

துருவ் விக்ரமின் பைசன் படம்

Published: 

19 Jul 2025 12:07 PM

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர்தான் துருவ் விக்ரம் (Dhruv Vikram). இவன் நடிப்பில் தமிழில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும், இவருக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா (Adithya Varma) என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடித்து வாழ்ந்தார். பின் தந்தை விக்ரமுடன் மகான் என்ற படத்திலும் இணைந்து நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் இவர் இணைந்த படம்தான் பைசன் (Bison). இந்த படமானது கபடி (Kabaddi) விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான நிலையில், வாழை படத்தை அடுத்ததாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) நடித்துள்ளார். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வரும் நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் உரிமையை பைவ் ஸ்டார் (Five Star) நிறுவனமானது கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? – சுதா கொங்கரா பதில்

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட தமிழ்நாடு ரிலீஸ் உரிமை அறிவிப்பு :

பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த பைசன் திரைப்படத்தில் கலையரசன், ரஜிஸா விஜயன், அழகம் பெருமாள், லால், பசுபதி என பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார். இப்படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில், இப்படமானது தீபாவளியை முன்னிட்டு வரும் 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எதிர்பார்ப்பில் சூர்யாவின் ‘கருப்பு’.. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

துருவ் விக்ரம் புதிய படம் :

நடிகர் துருவ் விக்ரம் இப்படத்தைத் தொடர்ந்து, இந்தி ரிமேக் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிற்து. கடந்த 2023ம் ஆண்டு நடிகர் கரண் ஜோகர் நடிப்பில் வெளியான கில் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.