பிக்பாஸ் வீட்டில் களேபரம்… கம்ருதின் – பிரவீன் இடையே மோதல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இத்தனை நாட்களாக வாய் வார்த்தைகளாக மட்டுமே இருந்த சண்டை இன்று கைகலப்பாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் களேபரமாகும் அளவிற்கு வீட்டில் பிரவீன் மற்றும் கம்ருதின் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் களேபரம்... கம்ருதின் - பிரவீன் இடையே மோதல்

பிக்பாஸ்

Published: 

04 Nov 2025 11:07 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் இருக்கும் போது மேலும் 4 போட்டியாளர்கள் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே பெற்று வருகின்றது. மேலும் இதுவரை 8 சீசன்களாக போட்டியாளர்கள் குறித்த விமர்சனங்கள் மக்களிடையே இருந்தாலும் அங்கு இருக்கும் யாராவது ஒரு போட்டியாளர் எங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கே இருக்கும். ஆனால் இந்த சீசனில் எந்த போட்டியாளரையும் அப்படி பிடிக்கவில்லை என்றே ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் ஒளிபரப்பான கடந்த 8 சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த 9-வது சீசன் தான் ரசிகர்களிடையே அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5-வது வாரம் நடைப்பெற்று வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் ஓபன் நாமினேஷனாக நடைப்பெற்றது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ள நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே வந்த 4 பேர் மற்றும் கடந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்ற கனி திரு ஆகிய 5 நபர்களை நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற நாமினேஷன் ப்ராசசில் வினோத், வியானா, சபரி, விக்ரம், பார்வதி, கம்ருதின், பிரவீன், கெமி, துஷார், திவாகர், ரம்யா ஜோ மற்றும் எஃப்ஜே ஆகிய 12 பேர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.

களேபரமான பிக்பாஸ் வீடு… கம்ருதின் – பிரவீன் இடையே மோதல்:

அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கம்ருதின் மற்றும் பிரவீன் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களை தடுக்க இடையே பிரஜின் செல்கிறார். இதனைத் தொடர்ந்து கம்ருதின் மற்றும் பிரஜின் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாண்ட்ரா பயத்தில் அழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சியான் 63 படத்தின் விக்ரமிற்கு ஜோடி இந்த நடிகையா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நவம்பர் 14-ம் தேதி ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராஃப் படம் – சேரன் வெளியிட்ட அப்டேட்