எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லனாக மிரட்டும் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

Ethirneechal Thodargiradhu Serial Actor Vela Ramamoorthy: தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் சீரியலாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த தொடரில் வில்லனாக ரசிகர்களை மிரட்டி வரும் வேல ராமமூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லனாக மிரட்டும் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

வேல ராம மூர்த்தி

Published: 

05 Mar 2026 17:02 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கினார் நடிகர் வேல ராம மூர்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளார். தொடர்ந்து வெள்ளித்திரையில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்தி தற்போது சின்னத்திரையில் வில்லனாக கலக்கி வருகிறார். அதன்படி சன் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் தொலைக்காட்சி தொடராக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் முன்னதாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைப் போல இந்த இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி இந்த முதல் பாகத்தில் குணசேகரன் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து முன்னதாக நடித்து இருந்தார். நாயகன் நாயகி கதாப்பாத்திரத்தைவிட வில்லனான மாரிமுத்துவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது கதாப்பாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவர் மாரிமுத்துவின் கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறது.

எதிர்நீச்சல் 2 சீரியல் வேல ராம மூர்த்தியின் சம்பளம் இவ்வளவா?

முதல் பாகத்தில் மாரிமுத்துவின் ரசிகர்கள் வேல ராம மூர்த்தியை அந்த கதாப்பாத்திரத்தில் பொருத்திப் பார்க்க சிரமப்பட்டாலும் தற்போது இரண்டாம் பாகமான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வேல ராம மூர்த்தியை முழுவதுமாக ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மொரட்டு வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி வரும் நடிகர் வேல ராம மூர்த்தியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சாய் அபயங்கர் இசையில் வெளியானது மீண்டும் ஒரு இன்டிபென்டன்ட் சாங்… ரசிகர்களிடையே வைரலாகும் பவழ மல்லி!

அதன்படி நடிகர் வேல ராம மூர்த்தி எதிர்நீச்சல் தொடர்கிறது தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக ஒரு நாளுக்கு ரூபாய் 40 ஆயிரம் சம்பளமாக பெருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சீரியலில் நடிக்கும் பெரும்பாளான நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உஸ்தாத் பகத் சிங் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதோ

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி