‘3’ படம் இப்போது வெளியானால்…. நடிகை ஸ்ருதி ஹாசன் வருத்தம்
நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் ஓடிடி இல்லை, பான் இந்தியா சினிமா இல்லை. அந்தப் படம் இப்போது வெளியானால் கொலவெறி பாடலை விட மிகப்பெரிய வெற்றிருக்கும் என்று பேசினார்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் புதுப்படங்கள் தியேட்டரில் வரிசைக்கட்டுகின்றன. கோலிவுட்டில் மாரீசன் மற்றும் தலைவன் -தலைவி படங்கள் எதிர்பார்ப்புடன் ரிலீசாகவுள்ளன. இயக்குநர் சுதீஷ் சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மற்றும் (Actor Vadivelu) , ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இன்னும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அடுத்தப்படியாக விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்துள்ள தலைவன் – தலைவி படம் ரிலீசாகவுள்ளது. ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை கொடுத்த ஹிட் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் இப்படம் இன்று வெளியாகிறது. கணவன் – மனைவி உறவுக்கு இடையேயான பாசம், சிக்கல் போன்ற விஷயங்களை இப்படம் பேசும் என தெரிகிறது. இதுபோக கூலி படம் அப்டேட் மற்ற சினிமா செய்திகளையும் இந்த நேரலை பகுதியில் உடனுக்குடன் பார்க்கலாம்
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்
LIVE NEWS & UPDATES
-
மிர்ச்சி செந்திலின் போலீஸ் போலீஸ் – ரிலீஸ் அப்டேட்!
மிர்ச்சி செந்தில் நடித்துள்ள காமெடி தொடரான போலீஸ் போலீஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து புதிய போஸ்டரை ஜியோ ஹாட்ஸ்டார் போஸ்டர் வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க இது நகைச்சுவை தொடராக உருவாகியிருக்கிறது. இதில் நடித்துள்ள பிற நடிகர்களின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வசந்த் ரவி – சுனில் இணைந்து நடித்துள்ள இந்திரா – ரிலீஸ் அப்டேட்!
வசந்த் ரவி – சுனில் இணைந்து நடித்துள்ள படம் இந்திரா. சபரிஷ் நந்தா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 22, 2025 அன்று திரைக்குவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎஸ்எம் மூவி புரொடக்சன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அஜ்மல் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
-
உபர் டிரைவராக வேலை பார்ப்பேன்.. – ஃபகத் பாசில்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஃபகத் பாசில், என்னை ரசிகர்களுக்கு போராடிக்கும்போது நான் பார்சிலோனாவில் உபர் டிரைவராக இருப்பேன். மக்களை அவர்கள் செல்லும் இடத்தில் கொண்டு போய்விடுவதை விட சிறந்த மகிழ்ச்சி வேறு இல்லை. என்று குறிப்பிட்டார்
-
கூலி பட இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப்போகுது தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 2, 2025 அன்று நடைபெறவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
-
டான்ஸ் ஸ்டுடியோ தொடங்கிய சூர்யா – வைரலாகும் வீடியோ
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு டீசர் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சாரபாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை துவங்கியிருக்கிறார். இதுதொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கிருஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து கடந்த ஜூலை 25, 2025 அன்று வெளியான படம் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் முதல் நாளில் ரூ.58 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார்.
-
தனுஷின் இட்லி கடை பட முதல் பாடல் – ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட போஸ்டர்!
தனுஷின் இட்லி கடை படத்தின் முதல் பாடல் ஜூலை 27, 2025 அன்று வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, நடிகர் தனுஷ் எழுதி, பாடியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட போஸ்டர்
The magic of #idlykadai unveils on 27th pic.twitter.com/YetGLuUhEY
— G.V.Prakash Kumar (@gvprakash) July 25, 2025
-
கோவை சரளா இன்னொரு மனோராமா – வடிவேலு பேட்டி
மாமன்னன் படத்துக்கு பிறகு ஃபகத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் மாரீசன். இந்தப் படம் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து கோவை சரளா நடித்துள்ளார். இந்தப் படம் தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டியில், கோவை சரளா இன்னொரு மனோராமா என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கூலி பட இசை வெளியீட்டு விழா – சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவன் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது.
கூலி இசை வெளியீட்டு விழா குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்
Stay Tuned! #Coolie pic.twitter.com/SK1orO6g6p
— Sun Pictures (@sunpictures) July 25, 2025
-
சிவனாக மன்சூர் அலிகான் !
நடிகர் மன்சூர் அலிகான் சிவன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சிவன் குறித்த ஆல்பம் பாடலுக்காக அவர் இவ்வாறு வேடமணிந்துள்ளதாகவும், இந்த ஆல்பத்தை அவரே இசையமைத்து, பாடி, இயக்கி நடித்துள்ள்ளதாகவு்ம் கூறப்படுகிறது. அகம் பிரம்மாஸ்மி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
-
ஜெயிலர் 2 பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு!
கூலி படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் 2. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் பாடல் காட்சி சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
-
டைரக்டர்களின் நடிகை என்பதில் மகிழ்ச்சி – நிமிஷா சஜயன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 20, 2025 அன்று வெளியான படம் டிஎன்ஏ. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேேற்பை பெற்றது. குறிப்பாக நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நடிப்பு என்பது தவம். அதற்காக எவ்வளவு வருத்திக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன். இயக்குநர்களின் நடிகை என்று அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ரசிகர்கள் அட்டகாசம் – ஹரி ஹர வீரமல்லு படம் பாதியில் நிறுத்தம்
இங்கிலாந்தில் திரையரங்கம் ஒன்றில் பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் பேப்பரை பறக்க விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திரையரங்க ஊழியர்கள் ரசிகர்களை எச்சரித்த பின்னர் மீண்டும் படம் திரையிடப்பட்டது.
-
சுயசரிதை எழுதும் ரஜினிகாந்த்… – இயக்குநர் லோகேஷ் தகவல்
கூலி படம் தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூலி படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் சுயசரிதை எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அவர் வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொள்வேன் என்றார்.
-
3 படம் இப்போது வெளியாகியிருந்தால்… ஸ்ருதி ஹாசன் வருத்தம்
சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ருதி ஹாசன் பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், 2 படம் வெற்றி பெறும் என நினைத்தேன். அப்போது ஓடிடி இல்லை, பான் இந்தியா சினிமா இல்லை. இப்போது 3 படம் வெளியானால், அது கொலவெறி பாட்டை விட மிகப்பெரிய வெற்றிபெறும் என்று பேசியிருந்தார்.
-
பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தில் சிறப்புத்தோற்றத்தில் சிவகார்த்திகேயன்?
கீர்த்தி வாசன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துவரும் டூட் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சில புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது.
-
தலைவர்கள் குறித்து அவதூறு – விநாயகன் மீது போலீசில் புகார்
கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் எனது தந்தையும் இறந்தார், அச்சுநதானந்தனும் இறந்தார், காந்தியும் இறந்தார் என பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தலைவர்களை அவமதித்ததாகக் கூறி காங்கிரஸ் சார்பில், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
கமல்ஹாசன் – அன்பறிவ் பட ஷூட்டிங் அப்டேட்!
சண்டைபயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசமையக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
-
கூலியில் சத்யராஜ் சாருக்கு மகளாக நடிக்கிறேன் – ஸ்ருதி ஹாசன் விளக்கம்
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு மகளாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் சத்யராஜ் சாருக்கு மகளாக நடித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பெருமையா இருக்கு… அப்பா கமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன் வாழ்த்து!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஜூலை 25, 2025 அன்று ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், லவ் யூ பா, உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கர்நாடகாவைச் சேர்ந்தவள் என்றாலும்…. நடிகை ஷில்பா மஞ்சுநாத் நெகிழ்ச்சி!
முதல் பக்கம் என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது, நான் கர்நாடகாவைச் சேர்ந்தவள் என்றபோதிலும் எனக்கு வாய்ப்பு வழங்கிய இந்த மண்ணுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் மட்டும் தான் பேதநான் கர்நாடகாவைச் சேர்ந்தவள் என்றபோதிலும் எனக்கு வாய்ப்பு வழங்கிய இந்த மண்ணுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் மட்டும் தான் பேதங்களையும் கடந்த திறமைக்கு மதிப்பு தருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எந்த காரில் வருகிறோம் என்பதை வைத்து சினிமாவில் மதிப்பு கிடைக்கும்: சாம் சிஎஸ்
சினிமாவில் தோற்றத்தையும், எந்த காரில் வருகிறோம் என்பதை வைத்து தான் மதிப்பீடு செய்வதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். சொகுசு காரில் வந்தால் மதிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் யாரை சொல்கிறார் என சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதம் நடந்து வருகிறது.
-
தலைவன் தலைவி ரீலிஸ் – Puri X Sethupathi படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 25, 2025 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தலைவன் தலைவி பட வெளியீட்டை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகந்நாத் படக்குழுவுடன் கொண்டாடினார்.
தலைவன் தலைவி பட வெளியீட்டைக் கொண்டாடிய விஜய் சேதுபதி
Blockbuster vibes already💥
Team #PuriSethupathi celebrated the magic of our dearest Makkal Selvan @VijaySethuOffl’s #SirMadam – #ThalaivanThalaivii, which is off to a flying start💥
The excitement is sky-high to witness it on the big screens!@MenenNithya @pandiraaj_dir pic.twitter.com/QPCuMr6K2S
— Puri Connects (@PuriConnects) July 25, 2025
-
டைரக்டர் ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோ சந்தீப் பிறந்த நாள் வாழ்த்து!
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஜூலை 25, 2025 அன்று ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சந்தீப் கிஷன் பிறந்த நாள் வாழ்த்து
Happyy Birthday to My Director Man & God Gifted Little Bro @official_jsj 💙
Such a blessing to be around your Pure Hearted Enthusiasm & Calm everyday … the world shall See/Celebrate your hardwork , sincerity & Originality very soon & I shall be the Proudest Brother 🤗Cheers to… pic.twitter.com/GpUEE6D5Di— Sundeep Kishan (@sundeepkishan) July 25, 2025
-
நான் தான் ஏமாற்றப்பட்டேன்.. சீரியல் நடிகை நடிகை ரெஹானா கண்ணீர் மல்க பேட்டி
பிரபல சீரியல் நடிகை ரெஹானா பேகம் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக சென்னை கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ் கண்ணன் என்பவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் தான் ஏமாற்றப்பட்டதாக நடிகை ரெஹானா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போகதாகவும் தெரிவித்துள்ளார்.
-
Maareesan: மாரீசன் படத்தின் ஸ்னீக்பிக் காட்சி வெளியீடு!
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள மாரீசன் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஸ்னீக்பிக் காட்சியானது யூட்யூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
-
பாட்ஷா படம் ரீ-ரிலீஸ்.. வைரமுத்து போட்ட நெகிழ்ச்சி பதிவு
நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் ரீ-ரிலீசானதை தொடந்து வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வைரமுத்து போட்ட பதிவு
பாட்ஷா படத்தின்
மறு வெளியீடு
சில தகவல்களைப்
பரிமாறுமாறு கூறுகிறது“எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ” என்றபாட்டு
அவசரம் கருதி
எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது“தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு” என்றபாட்டு
ஆண் குரலுக்காக மட்டும்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு
ஜேசுதாசால்… pic.twitter.com/JbneUT7M2Y— வைரமுத்து (@Vairamuthu) July 25, 2025
-
விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு
2025, ஆகஸ்ட் 14ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் இந்திய சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
-
மலையாளத்தின் அறிமுகமாகும் ப்ரீத்தி முகுந்தன்.. படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி முகுந்தன் அடுத்ததாக மலையாளத்தில் மைனே கியார் பியா என்ற படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த படமானது ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
War 2 Trailer: ரசிகர்கள் எதிர்பார்த்த வார்- 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!
பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர்., கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 14ல் வெளியாகும் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ட்ரெய்லரும் வரவேற்பை பெற்று வருகிறது.
-
டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படம்.. ஹீரோ யார் தெரியுமா?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது. அவரின் பிறந்தநாளான இன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. சேரன் இயக்கும் இப்படத்தில் ராமதாஸாக ஆரி நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் டூ மாநிலங்களவை எம்.பி., – கமல்ஹாசனுக்கு குவியும் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு துறைகளில் மிளிர்ந்து உலக நாயகன் என்ற பட்டத்தோடு திகழ்பவர் கமல்ஹாசன். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். இப்படியான நிலையில் தற்போது மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
உங்களுக்காக சண்டை போட்டுள்ளேன்.. அஜித்திடம் ரசிகர் சொன்ன தகவல்
ஐரோப்பாவில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ள நடிகர் அஜித்குமாரை ரசிகர் ஒருவர் சந்தித்து உரையாடினார். அப்போது அஜித்தா, விஜய்யா என சண்டை வரும்போதெல்லாம் நான் உங்கள் பக்கம் நின்றிருக்கிறேன். அந்த அளவுக்கு உங்களை பிடிக்கும் என அந்த ரசிகர் சொல்ல, அதனை அஜித் கேட்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
-
படமாகும் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு.. இயக்குநர் இவர் தான்!
இயக்குநர் சேரன் இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு அய்யா என்ற பெயரில் படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் மகனான ஜி.கே.எம். தமிழ் குமரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
-
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மாரீசன்
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில் முதல் பாதி முடிந்ததும் ரசிகர்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
-
ஸ்ரீதேவியின் ஆசையை அவரது கணவர் போனி கபூர்.. என்ன தெரியுமா?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை அவரது கணவர் போனி கபூர் இப்போது நிறைவேற்றியுள்ளார். நான் உடல் எடையை குறைத்தும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மனைவி விரும்பினார் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இதனிடையே அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
-
ஹரி ஹர வீர மல்லு பேனர் கிழிப்பு
பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு படம் ரிலீஸான நிலையில், பெங்களூருவில் கன்னட மொழி இல்லை என பேனர் கிழிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான கமல்ஹாசன் படமும் கன்னட மொழி இல்லை என கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
-
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது – கமல்ஹாசன்
மாரீசன் படம் குறித்து நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ’மாரீசன் படத்தைப் பார்த்தேன் – இது நகைச்சுவைக்கும் ஆழத்திற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம், என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், அதன் கைவினைப்பொருளைப் பாராட்டவும் வைத்தது’ என்றார்.
-
Maareesan Review : மாரீசன் ரிவியூ சொன்ன கமல்ஹாசன்
நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ள படம் மாரீசன். இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
கமல் போஸ்ட்
Watched Maareesan – a film that dances effortlessly between wit and depth, leaving me laughing, thinking, and admiring its craft. Had a wonderful conversation with the team to congratulate them on this delightful creation.
Beneath its humour lies a socially conscious lens on…
— Kamal Haasan (@ikamalhaasan) July 24, 2025
-
செம ஹிட்டடித்த கேப்டன் பிரபாகரன்
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். இதில் நடிகர் விஜயகாந்த் உடன் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்
-
Vijayakanth Movie : கேப்டன் பிரபாகரன் ரீ ரிலிஸ் பிளான்
நடிகர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் 100-வதாக வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
மாரீசன் மற்றும் தலைவன் – தலைவி ரிலீஸ்!
மாரீசன் படத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் நடித்துள்ளனர். இருவருமே ஏற்கெனவே மாமன்னன் படத்தில் நடித்தவர்கள். மற்றொரு படமான தலைவன் – தலைவி படத்தில் விஜய் சேதுபதி -நித்யாமேனன் நடித்துள்ளனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
-
Movie Release Today : இன்று வெளியாகும் 2 புதுப்படங்கள்!
வெள்ளிக்கிழமை என்றாலே புதுப்படம் ரிலீஸ் தான். அந்த வகையில் தமிழில் மாரீசன் மற்றும் தலைவன் -தலைவி படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகவுள்ளன.எளிமையான கதைக்களத்துடன் இரண்டுமே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
Published On - Jul 25,2025 7:59 AM